கொல்கத்தா அணியில் வாய்ப்பு: ஐ.பி.எல் ஆசையில் ரூ.30 லட்சத்தை இழந்த இளைஞர்

மும்பையைச் சேர்ந்த 18 வயது இளைஞரிடம் சிலர் ஐபிஎல் போட்டியில் விளையாட வைப்பதாக கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்

மும்பையைச் சேர்ந்த 18 வயது இளைஞரிடம் சிலர் ஐபிஎல் போட்டியில் விளையாட வைப்பதாக கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்

 • Share this:
  மும்பையைச் சேர்ந்த 18 வயது இளைஞரிடம் சிலர் ஐபிஎல் போட்டியில் விளையாட வைப்பதாக கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்.

  14வது ஐ.பி.எல் போட்டித் தொடர் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. தற்போது கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதால் ஐ.பி.எல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், மீண்டும் போட்டி எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

  இந்நிலையில், மும்பை, முலுண்ட் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது 18 வயது மகனை கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்த்துள்ளார். இளைஞரும் வாரம் இருமுறை அங்கு பயிற்சி பெற்று வந்துள்ளார்.  அப்போது புஷ்கர் திவாரி என்ற  இளைஞருடன் நட்பு வைத்துள்ளார். மகாராஷ்டிரா அணியில் இடம் பிடிப்பது கடினம் என்பதால் பிற மாநில அணிகளில் சேர்ந்து விளையாடும்படி இளைஞருக்கு திவாரி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

  இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணிக்கு பந்துவீச்சாளர் தேவை என்றும் பணம் கொடுத்தால் அணியில் சேர்த்து விடுவதாகவும் இளைஞரிடம் திவாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதை உண்மை என்று நம்பிய இளைஞரின் தந்தை 2 தவணைகளில் 30 லட்சம் ரூபாய் பணத்தை விளையாட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளருக்கு வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர், இளைஞரின் தந்தையின் தொலைப்பேசி அழைப்புகளை தவிர்த்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளைஞரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: