சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவரது 5 வயது மகள் ஸிவா தோனிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடாததால் தோனியின் 5 வயது மகள் ஸிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என அருவருக்கத்தக்க வகையில் சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல்போட்டியில் மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை தோல்வியைத் தழுவியது.
தோனியும் இந்தப் போட்டியில் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஸிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டனர். இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, சாக்ஷி தோனி அளித்த புகாரின் பேரில் நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்ச் (மேற்கு) காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த இளைஞன் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் முந்த்ராவைச் சேர்ந்தவன். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த பின்னர், ராஞ்சி போலீசார் அந்த இளைஞனின் கணக்கு தொடர்பான தகவல்களை குஜராத் போலீசாருடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் கருத்துக்களைத் தெரிவித்தவர் அவரா என்று கண்டுபிடிக்கச் சொன்னார். 16 வயது சிறுவனின் வாக்குமூலத்திற்குப் பிறகு, அவரை ராஞ்சி போலீசார் கைது செய்வார்கள்.
"குற்றம் சாட்டப்பட்டவர் கட்ச் மாவட்டத்தில் முந்திராவைச் சேர்ந்தவர் என்று ராஞ்சி போலீசார் எங்களுக்குத் தெரிவித்ததையடுத்து நாங்கள் அவரை விசாரித்தோம். அந்தச் செய்தியை வெளியிட்டவர் சிறுவன் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதால் அவர் ராஞ்சி போலீசில் ஒப்படைக்கப்படுவார் என எஸ்.பி. சிங் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat, IPL 2020, MS Dhoni, Ziva Dhoni