13-வது
சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர் சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைப் பெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த சர்வதேச அளவிலான போட்டி, சக்தி குழுமத்தின் மகாலிங்கம் கோப்பைக்காக தொடர்ந்து 13 வது முறையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான முதன்மை நடுவர் நித்தின் சென்வி மற்றும் வாசுதேவ் மேனன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் வாசுதேவ், ‘13 வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி வருகின்ற ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் சதுரங்க போட்டியில் 255 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஓபன் பிரிவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் கிராண்ட்மாஸ்டர்களான ரஷ்யா விளையாட்டு வீரர் சாவச்சங்கோ போரிஸ், பெல்லாரிஸ் பதேரோவ் அலீஸேய் மேலும் வியட்நாம் வீரர் ன்குயின் வேன் ஹுய் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
FIDE செஸ் தரவரிசை புள்ளிகள் அல்லாதோர், இதில் கலந்துகொண்டு தங்களுக்கான FIDE புள்ளிகளை அதிகரித்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர். மொத்தம் 15 லட்ச ரூபாய் வரை பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது. அதில் முதல் பரிசு 3 லட்ச ரூபாய் வரை வழங்க இருக்கிறோம். இரண்டாவது பரிசு 2 லட்ச ரூபாய், மூன்றாவது 1,25,000 ரூபாய் வரை வழஙக இருக்கிறோம் என்றார்.
இந்த போட்டி சென்னையில் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
13வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியின் Title Sponsor சக்தி மசாலா குரூப் உறுதி செய்துள்ளனர்.
10 நாடுகளில் இருந்து இதுவரை 270 பேர் பதிவு செய்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 55 வெற்றியளர்களுக்கு பரிசு வழங்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து 44 வது ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது பெருமைக்குரியது. தமிழக அரசு ஒலிம்பியாட் தொடருக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணிகளில் A அணி அனுபவம் வாய்ந்தது என்று தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.