• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தமிழகத்தில் 100 ஸ்மார்ட் மைதானங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் 100 ஸ்மார்ட் மைதானங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஸ்மார்ட் மைதானம். (மாதிரி வரைபடம்)

ஸ்மார்ட் மைதானம். (மாதிரி வரைபடம்)

100 Smart Sports Stadiums Will Build In TN Rural Areas: Minister Sengottaiyan | அமைச்சரின் அறிவிப்பால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் 100 ஸ்மார்ட் மைதானங்கள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய அரசு பணியாளர்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், முதல் இடம் பிடித்த சென்னை அணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் பரிசுக்கோப்பையுடன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அடுத்த இரண்டு இடங்களை பிடித்த டெல்லி மற்றும் கொச்சின் அணிக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழக மாவட்ட கிராமப்புறங்களில் இருக்கின்ற மாணவர்களின் நலனுக்காக 100 ஸ்மார்ட் மைதானங்கள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம் மூலம் பல வசதிகளை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன், sengotayan
அமைச்சர் செங்கோட்டையன்.


தொடர்ந்து பேசி அவர், “நீச்சல் போட்டியில் சிறந்து விளங்கும் மீனவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மாணவர்கள், மலை கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு விளையாட்டில் உரிய பயிற்சி அளிக்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அமைச்சரின் அறிவிப்பால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Watch...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: