Home /News /spiritual /

இந்த ஆண்டு எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும் தெரியுமா?

இந்த ஆண்டு எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும் தெரியுமா?

ராசிக்கல்

ராசிக்கல்

gemstones | நாம் விரல்களில் அணியும் ராசிக்கற்கள் நமக்கு கூடுதல் பலம் தந்து நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

    நாம் விரல்களில் அணியும் ராசிக்கற்கள் நமக்கு கூடுதல் பலம் தந்து நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. அதற்காக எல்லாமே ராசிக்கற்கள் தானே என அணியக்கூடாது. உங்கள் ராசி மற்றும் நட்சத்திற்கு ஏற்ற ராசிக்கற்களை அணிவது தான் பலன் கொடுப்பதாக அமையும். எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதியாக உள்ளதால், அவர்கள் சிவப்பு பவளத்தை அணிய வேண்டும். இது ஆற்றலைத் தூண்டும் பொருள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளதால், அடக்கம், ஞானம், மகிழ்ச்சி மற்றும் அழியாமை போன்றவற்றை தரும். இது பொதுவாக குடல் பிடிப்பு, தூக்கமின்மை மற்றும் சிறுநீர்ப்பை கற்களை குணப்படுத்தும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதால், சாதாரண வைரத்திற்கு பதிலாக, வெள்ளை ரத்தின கல், வெள்ளை புஷ்பராகம், டான்புரைட், ஃபீனாகைட் போன்றவற்றை அணியலாம். ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஈர்ப்பையும் தரும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு மரகதம் நல்லது, குறிப்பாக புதன் திசை நடப்பவர்கள் மரகத கற்களை அணியலாம். மரகதம் புத்திசாலித்தனத்தையும், புத்தி கூர்மையையும் அதிகரிக்கிறது. மற்றும் அணிபவரை விரைவாக புத்திசாலித்தனமாக யோசிக்க வைக்கிறது. புதன் கலை, படைப்பாற்றல் மற்றும் அறிவு ஆகியவற்றின் புரவலர் ஆவார். எனவே இந்த எல்லா குணங்களையும் பெற விரும்புவோர் மரகதம் அணிய வேண்டும்.

    கடகம்:

    கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திர திசை நடப்பதால், அவர்கள் அணிய வேண்டியது முத்து. இதற்கு மாற்றாக மூன் ஸ்டோன் என அழைக்கப்படும் சந்திரகாந்தம் கற்களையும் அணியலாம். இது கோபத்தை குறைக்கவும், மனதை சமநிலைப்படுத்தவும், அமைதியாக வைத்திருக்கவும் உதவுகிறது. தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிபதியாக சூரியன் உள்ளதால், மாணிக்க கற்களை அணிய வேண்டும். அதற்கு மாற்றாக சிவப்பு ஸ்பைனல், கார்னெட், சிவப்பு டூர்மேலைன் ஆகியவற்றை அணியலாம். மாணிக்க கற்கள் சூரியனிடம் இருந்து ஆற்றலை உள்வாங்குவதாக நம்பப்படுகிறது. இதனை அணிபவர்கள் இதயத்தில் அன்பு, அரவணைப்பு மற்றும் இரக்க உணர்வுகளை விதைக்கிறது.

    கன்னி:

    கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதனால் ஆளப்படுகிறார்கள், எனவே அவர்கள் மரகதத்தை அணிய வேண்டும், அதற்கு மாற்றாக பச்சை டூர்மேலைன் மற்றும் பெரிடோட் எமரால்டு போன்றவற்றை அணியலாம். இது புத்தி, பேச்சு, நினைவகம், குறுகிய பயணம், ஞானம் மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை கொடுக்க கூடியது.

    துலாம்:

    துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவார்கள், எனவே அவர்கள் வைரத்தை அணிய வேண்டும். இது மகிழ்ச்சி, யோகம், வசீகரத்தை தரக்கூடியது. எனவே இதனை அணிந்தால் திருமண வாழ்க்கையில் காதல் மேலொங்கும், மனைவியிடமிருந்து அதிக ஒத்துழைப்பு கிடைப்பதை காணலாம்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதியாக இருப்பதால், சிவப்பு பவளம் அணிய வேண்டும். அதற்கு பதிலாக கார்னிலியன் அணியலாம். ஆற்றல், உயிர்ச்சக்தி, குருதி திசை, லட்சியம் ஆகியவற்றின் மூலமாக செவ்வாய் உள்ளது. இதனால் கோபம் குறையும், கோபம், பொறாமை போன்ற தீய குணங்களை போக்கு நல்ல வழிப்படுத்த உதவும்.

    தனுசு:

    தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழனால் ஆளப்படுவார்கள், மஞ்சள் புஷ்பராகம் அணிய வேண்டும். அதற்கு மாற்றாக பெரில், சிட்ரின் மஞ்சள் சபையர் ஆகியவை அடங்கும். இது மன ஆற்றலை மேம்படுத்துகிறது, பசியின்மை, அஜீரணம், தொழுநோய், பைல்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.

    மகரம்:

    சனி திசை நடக்கும் மகர ராசிக்கார்கள் நீலக்கல் அணிய வேண்டும். நீல புஷ்பராகம், அமேதிஸ்ட் நீல கற்களையும் மாற்றாக அணியலாம். இதை அணிவதால் சமூகத்தில் செல்வாக்கு மற்றும் அந்தஸ்து உயரும். புகழ், கெளரவ, செல்வம், பரிபூரண மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான சிலர் இந்த ரத்தினத்தை அணிந்திருப்பதைக் காணலாம்.

    கும்பம்:

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனியால் ஆளப்படுவார்கள், எனவே அவர்கள் நீல கற்கள் அணிய வேண்டும். இதனை அணிபவர்களுக்கு மன தெளிவு கிடைக்கும் மற்றும் குழப்பங்கள், சந்தேகங்கள் நீக்குகிறது. இது கவனம் மற்றும் செறிவு மேம்படுத்த உதவுகிறது. நீல நீலக்கல் அணிபவருக்கு பெயர், புகழ், செல்வம் மற்றும் பணம் ஆகியவை கிடைக்கும்.

    மீனம்:

    மீன ராசியில் பிறந்தவர்கள் வியாழனால் ஆளப்படுவதால் கண்டிப்பாக கனக புஷ்பராகம் அணிய வேண்டும். மஞ்சள் புஷ்பராகம், பெரில் மற்றும் சிட்ரின் மஞ்சள் கற்கள் ஆகியவற்றையும் அணியலாம். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும் லட்சியத்தை அடைய உதவுகிறது. திருமணங்கள் கைகூடவும், தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி பொங்கவும் உதவுகிறது. கம்பீரம் மற்றும் துணிச்சலை கொடுப்பதால், இதனை அணிபவர்கள் நம்பிக்கையுடன் முன்னேற வழிவகுக்கும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Astrology, Rasi Palan

    அடுத்த செய்தி