‘நவராத்திரி’ இந்தியாவில் 9 இரவுகள் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான விழா. இந்தியாவில் மக்கள் 4 வகையான நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றனர். வராஹி நவராத்திரி, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி அல்லது சாரதியா நவராத்திரி, தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி அல்லது சைத்ரா நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இதில் வட இந்தியர்களால் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது.
சைத்ரா நவராத்திரி வரலாறு:
இந்து புனித நூல்களின்படி, துர்கா தேவியை சிவபெருமான் தனது பெற்றோரின் வீட்டிற்கு 9 நாட்கள் சென்று தங்க அனுமதித்தார். இந்த 9 நாட்களில் துர்கா மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதாக நம்பப்படுகிறது, இது தீமையின் மீது நன்மையின் வெற்றியை குறிக்கிறது. துர்க்கையை வழிபடுவது பலத்தை அளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்று முதல் நவராத்திரி விழா கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாட தொடங்கியது.
சைத்ர நவராத்திரி மற்றும் கட்டஸ்தாபனம் முக்கியத்துவம்:
சைத்ரா நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது; ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் 9 வெவ்வேறு வடிவங்களுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் துர்கா தேவி தனது பக்தர்களுடன் வசிப்பதற்காக சொர்க்கத்திலிருந்து இறங்கி வருவதாக கூறப்படுகிறது. கட்டஸ்தாபனம் சடங்கு நவராத்திரியின் போது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் இது ஒன்பது நாட்கள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. நவராத்திரியின் தொடக்கமாக கட்டஸ்தாபனம் நடத்தப்படுகிறது.
சைத்ரா நவராத்திரி தேதி, நேரம் மற்றும் முகூர்த்தம்:
சைத்ரா நவராத்திரி பண்டிகை மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் குடிபத்வா பண்டிகையுடன் தொடங்குகிறது. அதே சமயம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கொண்டாட்டத்தின் படி யுகாதி கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு கட்டஸ்தாபன நாளான நேற்று, அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி சனிக்கிழமை திருவிழா தொடங்கியுள்ளது. அதற்கான முகூர்த்த நேரங்கள் பின்வருமாறு:
கட்டஸ்தாபன முகூர்த்தம்: ஏப்ரல் 02, 2022 காலை 06:31 மணி முதல் 08:31 மணி வரை
கட்டஸ்தாபன அபிஜித் முகூர்த்தம் : ஏப்ரல் 2, 2022 இரவு 12:19 மணி முதல் 01:08 மணி வரை
பிரதிபாதா திதி அன்று கட்டஸ்தாபன முகூர்த்தம்:
பிரதிபாதா திதி தொடங்குவது: ஏப் 01, 2022 அன்று காலை 11:53 மணி
பிரதிபாதா திதி முடிவடைதல்: ஏப் 02, 2022 அன்று காலை 11:58 மணிக்கு
கட்டஸ்தாபனா முகூர்த்தம் என்றால் என்ன?
ஆளும் பிரதிபாதத்தின் மூன்றாம் நாளில் கட்டஸ்தாபன சடங்குகளை மேற்கொள்வது மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. சில காரணங்களால், இந்த காலகட்டத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றால், அபிஜித் முஹுரத்தில் பூஜை செய்யலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை சக்திகளை அகற்ற, துர்கா சப்தசதி பூஜையின் பலன்களை பெறலாம்.
இந்த சைத்ரா நவராத்திரி பூஜைக்கான விதிமுறைகள் முகூர்த்த நேரத்தில் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது சக்தி தேவியை அழைக்கும் நோக்கம் கொண்டது. எனவே, சக்தி தேவியின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அமாவாசையின் போது அல்லது இரவில் அதை நடத்தக்கூடாது என்பது ஐதீகம்.
அபிஜித் முகூர்த்தம் என்பது நாளின் நடுப்பகுதியில் ஒரு நல்ல நேரம் மற்றும் இது சுமார் 51 நிமிடங்கள் நீடிக்கும். இது பல தோஷங்களை விரட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த நேரமாக செயல்படுகிறது மற்றும் வாழ்க்கையில் நல்ல செயல்களைத் தொடங்குவதற்கு மிகவும் பயனுள்ள முகூர்த்தம் என்று நம்பப்படுகிறது. சித்ரா நட்சத்திரம் மற்றும் வைத்ரிதி யோகம் சாதகமான அம்சமாக இருந்தாலும், அவை கட்டஸ்தாபன விதியை நடத்துவதற்கு சாதகமற்றதாகக் காணப்படுகின்றன. இது தவிர, ஆளும் பிரதிபாதா நேரத்தில் இந்த சடங்கு நடத்துவதற்கு பிற்பகல் நேரம் மிகவும் உகந்தது ஆகும்.
கட்டஸ்தாபனா, சைத்ரா நவராத்திரி பூஜை விதிமுறைகள்:
சுத்தமாண மண், வாய் அகலமான மண் பானை, ஏழு வெவ்வேறு தானியங்கள், சிறிய பித்தளை கலசம், புனித நூல், வாசனை திரவியம், நாணயங்கள், வெற்றிலைகள், மா இலைகள், உரிக்கப்படாத தேங்காய், சிவப்பு நிற துணி, துர்வா புல், சாமந்தி பூக்கள் ஆகிய பூஜை பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். துர்கா பூஜைக்கு முன்னதாக, மண் பானையின் அடிப்பகுதியில் ஒரு மண்ணை சேர்த்து கலசத்தை தயார் செய்யவும். தானியங்களை மண்ணின் அடியில் வைக்கவும். பானை மண்ணின் அடுக்குகளால் உச்ச நிலைக்கு நிரப்பப்படும் வரை இதனை தொடரவும்.
கலசம் அல்லது பித்தளை பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வாசனை திரவியம், வெற்றிலை பாக்கு, துர்வா புல், அக்சதை மற்றும் சில காசுகளை இந்த பாத்திரத்தில் வைக்கவும். பித்தளை பாத்திரத்தின் திறப்பில் 5 முதல் 6 மா இலைகளை வைத்து மூடி வைக்கவும். உரிக்கப்படாத தேங்காயைக் கொண்ட சிவப்புத் துணியில் புனித நூலைக் கட்டவும். பின்னர் இதை கலசத்தின் மேல் வைக்கவும்.
இறுதியில், இந்த பித்தளை பாத்திரத்தை மண் பானையின் மேல் வைக்கவும். இப்போது பூஜை அமைப்பு முடிந்து. அதில் துர்கா தேவியை ஆவாஹனம் செய்து, 9 நாட்கள் கலசத்தில் தங்கி அருள்பாலிக்குமாறு தேவியை வழிபடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Navaratri