ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதிக்கு போகனுமா? ரூ.300 தரிசனம் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதிக்கு போகனுமா? ரூ.300 தரிசனம் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati | டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் http://tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதிக்கு செல்ல 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 

அடுத்த மாதம் ஜனவரி இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருநாள். அன்றைய தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகிய உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி நாள் முதல் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று துவங்கி பத்து நாட்களும் ஏழுமலையான வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் இம்மாதம் 24 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிட உள்ளது.

Also see... ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவக்கம்.. 3,000 போலீசார் பாதுகாப்பு

நாள் ஒன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் 2,50,000 டிக்கெட்டுகள் வெளியிடப்படும். டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் http://tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati