500 ஆண்டுக்கால பழமைவாய்ந்த நெல்லையப்பர் தேர் திருவிழா ரத்தாகிறதா?
கொரோனா வைரஸ் காரணமாக 500 ஆண்டுக்கால பழமை வாய்ந்த நெல்லையப்பர் தேர் திருவிழா ரத்து செய்யப்படும் சூழுல் எழுந்துள்ளது.

- News18 Tamil
- Last Updated: June 20, 2020, 6:07 PM IST
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் –காந்திமதியம்மன் சிவாலயமும் ஒன்று. நடராஜபெருமானின் பஞ்ச சபைகளில் தாமிரசபையை கொண்ட திருத்தலம் மூங்கில் காடுகளுக்கு நடுவில் வீற்றிருந்ததால் வேணுவனநாதர் என பெருமான் அழைக்கப்பட்டார். மழையிலிருந்து நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் நெல்வேலி நாதர் என்ற பெயரும் உண்டு.
அதனாலேயே நெல்லைக்கு திருநெல்வேலி என பெயர் வந்தது. நெல்லை நகர பகுதியில் நடுநாயகமாக வீற்றிருக்கும் நெல்லையப்பர் –காந்திமதி அம்மனுக்கு ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் ஆனி மாதம் நடத்தப்படும் ஆனித் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1505 ம் ஆண்டு முதல் இங்கு தேர் திருவிழா நடைபெற்று வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயந்திர பயன்பாடு இன்றி பக்தர்களால் (மனித சக்தியால் ) இழுக்கப்படும் தேர் என்பது கூடுதல் சிறப்பு. சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி கூடியிருக்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர். நெல்லையப்பர் தேர்வடம் பிடித்து இழுத்தால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெருவர் என்பது ஐதீகம் . 4 ரத வீதிகளில் பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தேர் அசைத்தாடி வரும் காட்சியை காண கண் கோடி வேண்டும் என்பர் பக்தர்கள். திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலிருந்து லட்சம் பக்தர்களுக்கு மேல் கூடும் இந்த திருவிழா 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு வரும் 25 ம்ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வரலாற்றில் முதன்முறையாக தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மாதங்களாக வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை.
இதனால் இந்த ஆண்டு நெல்லையப்பர் தேர்திருவிழா நடைபெற வாய்ப்பில்லை. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் வெவ்வேறு சப்பரங்களில் அம்மன் வீதி உலா என சிறப்பான நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் 500 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வரும் திருவிழா இந்தாண்டு நடைபெறாது என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. எனினும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடத்தியது போல் நெல்லையப்பர் கோவிலில் வெளி பிரகாரத்தில் உலா வரும் வகையிலான செப்புத் தேர் இங்கு உள்ளது.அதைகொண்டு தேர்திருவழாவை நடத்தலாம் தொலைகாட்சிகள் மூலம் நேரலையில் மக்களுக்கு காட்டலாம். இதனால் சுவாமியை 3 மாதமாக தரிசிக்க முடியாத பக்தர்களின் மனம் மகிழ்ச்சியடையும் என்கின்றனர்.
அதனாலேயே நெல்லைக்கு திருநெல்வேலி என பெயர் வந்தது. நெல்லை நகர பகுதியில் நடுநாயகமாக வீற்றிருக்கும் நெல்லையப்பர் –காந்திமதி அம்மனுக்கு ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் ஆனி மாதம் நடத்தப்படும் ஆனித் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1505 ம் ஆண்டு முதல் இங்கு தேர் திருவிழா நடைபெற்று வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயந்திர பயன்பாடு இன்றி பக்தர்களால் (மனித சக்தியால் ) இழுக்கப்படும் தேர் என்பது கூடுதல் சிறப்பு. சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி கூடியிருக்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர். நெல்லையப்பர் தேர்வடம் பிடித்து இழுத்தால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெருவர் என்பது ஐதீகம் . 4 ரத வீதிகளில் பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தேர் அசைத்தாடி வரும் காட்சியை காண கண் கோடி வேண்டும் என்பர் பக்தர்கள்.