திருமணமாகாத ஆண்களுக்கு உடனே பெண் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்...
திருமணமாகாத ஆண்களுக்கு உடனே பெண் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்...
காட்சி படம்
Marriage Slogan | செவ்வாய் தோஷத்தினால் திருமணத்தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.
திருமணத்திற்காக மணப்பெண் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. சில ஆண்களுக்கு திருமணத்திற்காக பெண் தேடினாலும் அவர்களுக்கான வரன் சரியாக அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இவ்வாறு திருமணத் தடை இருக்கும் ஆண்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வர அவர்களுக்கு இருக்கும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். அவ்வாறான மந்திரம் என்ன என்பதனையும், அதற்கான பலன் என்ன என்பதனையும் தெரிந்து கொள்வோம் வாங்க...
தினமும் காலை அல்லது மாலை பூஜை அறையில் சாமி படத்திற்கு முன் அமர்ந்து உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை அல்லது உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் மனதார சொல்லி வந்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய் தோஷத்தினால் திருமணத்தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்காத ஆண்கள், ஏழைப் பெண்ணுக்கு உணவு மற்றும் தங்களால் இயன்ற புத்தாடையை தானமாக வழங்கினால் திருமணத் தடை நீங்கி, உங்களுக்கான மணப்பெண் உடனே கிடைத்திடுவார்கள் என்பதும் நம்பிக்கை.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.