திருமண வரம் தரும் ஆடி செவ்வாய் வழிபாடு!

திருமண வரம் தரும் ஆடி செவ்வாய் வழிபாடு!

ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது.

 • Share this:
  ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்களை வழிபாடு செய்வதும், திருவிழாக்கள் கொண்டாடுவதுமாக இருக்கின்ற ஒரு ஆன்மீகமயமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். இந்த ஆடி செவ்வாய் விரதம் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் திருமண தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

  வழிபாடும் முறை

  ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது. பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

  மேலும் படிக்க... ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு பலன்களும்

  செவ்வாயில் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

  நவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே செவ்வாய்க் கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனையும் அம்மனையும் வழிபாடு செய்தால் திருமணம் வரம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு கணவனோடு பிரச்னைகள் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வும் சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியமும் கிடைக்கும். மேலும் வேலை இல்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும்.
  Published by:Vaijayanthi S
  First published: