முருகனின் அருளை அள்ளித் தரும் ஆடிச் செவ்வாய்!

வைகாசி விசாகம்

செவ்வாய்க்கிழமைகளில் கிருத்திகை அல்லது விசாக நட்சத்திரம் அமைந்திருந்தால், அன்றைய தின விரதம் நிச்சயம் பலன் கொடுக்கும்.

 • Share this:
  செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள். செவ்வாய் எனப்படும் அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது, முருகப்பெருமானும், சக்தி தேவியும். புராணக்கதைகளின் படி, பூமிதேவியின் மகன் செவ்வாய். இந்த செவ்வாய்க்கும், பூமிக்கும் தொடர்ப்புள்ளது. அதனால் முருகப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

  நவக்கிரக வழிபாடுகளில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர், முருகப்பெருமான். அதனால் தான், பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபடுவது உகந்தது என்கிறார்கள். அதிலும், ஆடி செவ்வாய்க்கிழமை மிகவும் உயர்ந்த விரதமாகவே பாவிக்கப்படுகிறது.

  செவ்வாய்க்கிழமைகளில் கிருத்திகை அல்லது விசாக நட்சத்திரம் அமைந்திருந்தால், அன்றைய தின விரதம் நிச்சயம் பலன் கொடுக்கும். அன்றைய தினம், பூஜையறையில் நடுவில் வேல்வைத்து இருபுறமும் இருவிளக்குகள் வைத்து, ஒவ்வொரு விளக்கிலும் மூன்று திரிகள் விட்டு ஆறு தீபங்களாக ஏற்றுவித்தால் விரதம் சிறப்பு பெறும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானின் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் இது கொரோனா காலமாக இருப்பதினால் மக்கள் கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே முருகனை மனதில் நிறுத்தி வழிப்படுதல் நல்லது.

  மேலும் படிக்க.. ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு பலன்களும்

  முருகப்பெருமானுக்குரிய இத்தினத்தில், இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்தால் முருகனின் அன்பைப் பெறலாம். ஆடி செவ்வாயில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கல்வியில் உயர்வடைய நினைக்கும் மாணவர்கள் சிறந்து விளங்கலாம். சொந்த வீடு கனவுகள் நனவாக முருகப்பெருமான் அருள்புரிவார். திருமணப்பேறும் குழந்தை செல்வமும் அருள்வார். வாழ்க்கையில் பேரும் புகழும் உண்டாகும்.
  Published by:Vaijayanthi S
  First published: