Home /News /spiritual /

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா?

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா?

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா? |

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா? |

நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுவதும் பிள்ளையாரை வழிபடும்போது பக்தர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் ஆகும்.

    நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது தடைகள் ஏற்படாமல் இருக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போட்டும், தலையில் குட்டிக்கொண்டும் வழிபடுவார்கள். இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் 3 முறை குட்டி அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் செய்து வழிபடுகின்றனர்.

    பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து ஒரு விதமான சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. நமது நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது. இதுபோல வளரும் குழந்தைகள் தினமும் செய்துவந்தால் மிகவும் நல்லது.

    புராணக் கதை

    கஜமுகாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அவனது தவ வலிமையைக்கண்டு சக்திமிக்க பல வரங்களை அவர் வழங்கினார். இத்தனை வரங்களைப் பெற்றதும் கஜமுகாசுரன் தனது சேஷ்டைகளைத் தொடங்கிவிட்டான். மக்களுக்கும், தேவர்களுக்கும் கணக்கிலடங்காத துன்பங்களைக் கொடுத்தான். தேவர்கள் அவனுக்கு பயந்து தலையில் குட்டிக் கொண்டனர். அப்போது அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இந்த தோபுகரணம் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்லும். இதனால் நினைவாற்றல் கூடும். விநாயகரின் செல்ல கோபத்தை குறைக்க மாமா மகாவிஷ்ணு தனது காதை பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுந்தார். இதனால் விநாயகர் மகிழ்ச்சியடைந்தார் என்ற மற்றொரு புராணக்கதையும் உண்டு... அதன் நினைவாகவே இன்றும் தோப்புக்கரணம் போடுகிறோம் என்றும் சொல்லப்படுகிறது.

    Also see... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

    விநாயகர் சதுர்த்தி வரலாறு

    தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி தெரியுமா?

    1. முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.

    2. இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.

    3. கட்டைவிரல் வெளியேயும், ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.

    4. வலது கை, இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

    5. தலையை நேராக வைத்து, மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

    6. நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.

    7. பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.

    8. இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

     
    Published by:Vaijayanthi S
    First published:

    அடுத்த செய்தி