ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சாம்பிராணியை ஏன் பூஜையில் பயன்படுத்துகிறோம் தெரியுமா?

சாம்பிராணியை ஏன் பூஜையில் பயன்படுத்துகிறோம் தெரியுமா?

சாம்பிராணி

சாம்பிராணி

Sambrani | சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்குமாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும். அதன் அடிப்படையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை பல நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். பூஜையில் சுவாமிக்கு சாம்பிராணி போடும் வழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே சாம்பிராணி போடப், போட விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை. இதுவே, இறைவனுக்கு சாம்பிராணி போடுவதன் தாத்பர்யமும் கூட.

கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போடுவதும் ஒரு வழக்கம். அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று நமது துன்பங்கள் அனைத்தும் லேசாகி விடுமாம்.

இவ்வளவு ஏன்?!.... குங்குலிய நாயனார் என்று ஒரு நாயனார் இருந்தார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். சுவாமிக்கு தூபம் இட்டே மோக்ஷம் பெற்றார்.

சாம்பிராணியின் வரலாறு : பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவத்திற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. இந்து மதம் என்று அல்ல, அனைத்து மதங்களிலும் சாம்பிராணியை இறைவனுக்கு செலுத்தி வந்து உள்ளனர். இதற்கு அவரவர் மத புஸ்தகங்களே சாட்சி.

பைபிளில் "யாத்திராகமம் 30" இல் இறைவனே சாம்பிராணியை போட்டு தூபம் காட்டுமாறு பணிக்கிறார். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், யூதர்கள், சீக்கியர்கள் என எல்லா மதங்களிலும் சாம்பிராணி ஏற்றும் வழக்கம் உள்ளது. அது உலகம் தோன்றியது முதலாகவே பல நாடுகளில் இருந்து வருகிறது.

பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். எனினும், இதில் தவறு இல்லை... ஆனால், பாரம்பரிய முறையே சற்று கூடுதல் நன்மை பயக்கும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

மேலும் படிக்க... விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

இன்றைய காலத்தில் உண்மையான சாம்பிராணியைத் தான் பயன் படுத்துகிறோமா? : உண்மையான சாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து (சாம்பிராணி மரம்) வடியும் பால் அல்லது பிசின் ஆகும். பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சாம்பிராணியாக மாறுகிறது. இந்தச் சாம்பிராணி ஆனது குமஞ்சம், குங்கிலியம் மரத்து வெள்ளை, பறங்கிச் சாம்பிராணி, வெள்ளைக் கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும்.

இன்றைய கால கட்டத்தில் சாம்பிராணி மரங்கள் வெகுவாக அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. எனினும், சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது.

மேலும் படிக்க... விளக்கு ஏற்றுவதில் கூட இத்தனை விஷயங்கள் இருக்கா?

இவ்வகை மரங்கள் அதிக உறுதித் தன்மை மிக்கவை. எனினும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். அது தான் இவ்வகை மரங்களின் விசேஷம். மேலும், சில இடங்களில் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும்.

சுவாமிக்கு சாம்பிராணி காட்டுவதால் ஏற்படும் சில நன்மைகள்

1. தீய சக்திகள் அண்டாது.

2. சாம்பிராணிப் புகை என்பது நுண் கிருமிகளை அழிக்க வல்லது.

3. சாம்பிராணி லக்ஷ்மி கடாக்ஷத்தை தரவல்லது.

4. சாம்பிராணி இறுதியில் மோக்ஷத்தை தரவல்லது.

5. தொடர்ந்து இறைவனுக்கு சாம்பிராணி போட்டு வந்தால் நமது வாழ்க்கையும் கூட நறுமணத்துடன் இருக்கும்.

மேலும் படிக்க... தீராத கடனும் தீர காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றி வழிபாடு செய்யுங்கள்...

First published:

Tags: Hindu Temple, Smoking