ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கருப்பு பூனை குறுக்கே வந்தால் மக்கள் தங்கள் பயணத்தை ஏன் நிறுத்துகிறார்கள் தெரியுமா?

கருப்பு பூனை குறுக்கே வந்தால் மக்கள் தங்கள் பயணத்தை ஏன் நிறுத்துகிறார்கள் தெரியுமா?

கருப்பு பூனை

கருப்பு பூனை

Black Cat Crosses Path | இந்து ஜோதிடத்தின்படி கருப்பு நிறம் பொதுவாக சனி பகவானுடன் தொடர்புடையது. ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால் நீங்கள் அவ்விடத்தை கடந்து செல்வதற்கு முன் வேறு யாரையாவது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்த நவீன டிஜிட்டல் யுகத்திலும் கூட காரணங்களை ஆராயாமல் பல மூட நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை அப்படியே மக்கள் பின்பற்றி வருகின்றனர். கண்ணாடி உடைவது துரதிர்ஷ்டம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டை கூட்டி பெருக்க கூடாது, இரவில் நகம் மற்றும் முடி வெட்ட கூடாது உள்ளிட்ட பல பல பழங்கங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

இதே போன்ற ஒன்று தான் நாம் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே செல்ல கூடாது என்பதும். முக்கியமான வேலைகளை அல்லது காரியங்களை செய்ய வீட்டை விட்டு வெளியேறும் போதோ அல்லது செல்லும் வழியிலோ பூனைகள் சாலையின் குறுக்கே நம்மை கடந்து செல்வது அபசகுனமாக கருதப்படுகிறது. அதிலும் கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

கருப்பு பூனைகளை சுற்றியுள்ள இந்த மர்மமான களங்கத்திற்கு காரணம் என்ன? நீங்கள் யோசித்தது உண்டா.. வீட்டிலிருக்கும் கண்ணாடி உடைந்தால் ஏழு வருடங்கள் துரதிர்ஷ்டம் துரத்தும் என்ற எண்ணம் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் உள்ளதும், இந்தியாவில் கருப்பு பூனை குறுக்கே செல்வது ஏன் அபசகுணமாக கருதப்படுகிறது என்பதற்கான சில காரணங்களை இங்கே பார்க்கலாம்.

இந்து ஜோதிடத்தின்படி கருப்பு நிறம் பொதுவாக சனி பகவானுடன் தொடர்புடையது. ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால் நீங்கள் அவ்விடத்தை கடந்து செல்வதற்கு முன் வேறு யாரையாவது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படி செய்வது உங்களை தாண்டி செல்லும் முதல் நபருக்கு எல்லா துரதிர்ஷ்டங்களும் சென்று விடும், உங்களுக்கு எதிர்மறை பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று நம்பப்படுகிறது. மேலும் கருப்பு பூனை உங்கள் பாதையின் குறுக்கே போவது சனி மற்றும் ராகு இருவரின் கோபமும் சேர்ந்து உங்கள் வழியை தடுக்கும் அறிகுறியாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. எனவே கருப்பு பூனையைப் பார்த்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது கடவுள்களின் கோபத்தை தணிக்கும் என்று நம்பப்படுகிறது.

கருப்பு பூனை

ஜோதிட சாஸ்திரம் ஒருபக்கம் இருந்தாலும் தற்போது பின்பற்றப்படும் இந்த வழக்கத்திற்கு வழிவகுத்ததாக நம்பப்படும் மற்றொரு சுவாரஸ்ய வரலாறு ஒன்றும் உள்ளது. சாதாரண மக்களின் போக்குவரத்துக்கான முதன்மையான வழியாக மாட்டு வண்டிகள் இருந்த நேரத்தில் வண்டிகளில் பூட்டப்பட்டிருந்த காளைகள் தங்கள் வழியில் கருப்பு பூனைகளைக் கண்டவுடன் வெறி கொண்டதோடு நேர் வழியில் பயணிக்காமல் இஷ்டத்திற்கு

துள்ளி குதித்து ஓடி வண்டியில் வருபவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. எனவே மக்கள் மாடுகளை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

Also see... சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளா?

இதற்கு சிறிது நேரம் எடுத்தது. எனவே தான் செல்லும் வழியில் கருப்பு பூனை அல்லது பூனையை கண்டவுடன் சிறிது நேரம் நின்று இந்த அந்த இடத்தை விட்டு புறப்படுவது வழக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இப்பழக்கம் படிப்படியாக ஒரு மூடநம்பிக்கையாக மாறியது. மக்களும் பூனைகள் குறிப்பாக கருப்பு பூனைகள் தங்கள் வழியில் குறுக்கிட்டால் பயணத்தை நிறுத்தும் நடைமுறையை இன்று வரை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Cat