இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே உண்ணும் உணவை இறைவனின் அருட்பிரசாதமாக பாவிக்கும் தன்மை இருக்கிறது... காரணம் நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்த நிலையை ஏற்படுத்தும்.
பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது. மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை பெறுவதில்லை.
பொதுவாக இந்தியாவில் இருக்கின்ற அனைத்து இன மக்களும் சித்தர்கள், ரிஷிகள் போன்ற ஆன்மீக பெரியவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கின்றனர். அத்தகைய சித்தர்களும், ரிஷிகளும் இறையாற்றல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அதிகமாக பெருக்கெடுப்பதற்கு புலால் எனப்படும் மாமிச உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கோயில்களில் இந்த தெய்வீக பிராண சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதை அறவே நீக்கியவர்கள், சிறிதளவு சைவ உணவுகளை சாப்பிட்டு கோயில்களுக்கு செல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது என தங்களின் அனுபவத்தின் மூலம் கண்டறிந்தனர்.
அசைவ உணவுகள் இத்தகைய நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.
நமது பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ள கூடிய உயரிய இடமான கோயில்களுக்கு செல்லும் போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவம் சேர்வதோடு, ஆற்றல் மிக்க தெய்வங்களின் சாபங்களையும் நமக்கு ஏற்படுத்திவிடும். எனவே முடிந்த வரை கோயிலுக்கு செல்லும் போது அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாக இருக்கும் என கருதப்படுகிறது...
Also see... வெள்ளிக்கிழமை அம்மனை வழிபாடு செய்தால் வீட்டில் நிம்மதி நிலவும்...
அதுமட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் பெரும்பாலும் கோவில்களுக்கு செல்லும்போதும் சரி பூஜைகள் பண்ணும் போதும் சரி உணவு உண்ணாமல்தான் செல்லுவார்கள். அற்கான காரணம் நாம் உணவு உண்ணாமல் இருக்கும்போது நம் உடலும் மனமும் ஆற்றல் மிகுதியாகவும் புத்துணர்வுடனும் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் இது பொருந்தாது..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Non Vegetarian