ஆடி மாதத்தில் வீட்டு வாசலில் வேப்பிலை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

வேபில்லை

வீட்டின் முற்றத்தில் வேப்பமரம் நட்டு வைப்பது என்பது நல்லது, காற்றை சுத்தபடுத்தி ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யும், கோடையில் குளுமையையும் தர வல்லது.

  • Share this:
ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். ஆடி மாதம் என்றதும்  நினைவுக்கு வருபவைகளில் மிக முக்கியமான ஒன்று வேப்பிலை. இந்த மாதத்தில் வீட்டு வாசலில் வேப்பிலை செருகி வைப்பது ரொம்பவே விசேஷம். இன்றும் நமது தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இதை கடைபிடித்து வருகின்றனர். அப்படி வேப்பிலையை கட்டுவதினால், வீட்டிற்குள் கெட்ட சக்திகள் வராது என்றும் அம்மனுடைய அருள் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் வேப்பிலை கிருமி நாசினியாகவும் பயன் படுத்தப்படுகிறது.

இந்த ஆடி மாதத்தில் நோய்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் வேப்பிலையும் மஞ்சள் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ஆடி மாதத்தில் எந்த அம்மன் கோவிலுக்கு சென்றாலும் மஞ்சள் நீரும் வேப்பிலையும்  பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பார்கள். இதனால் அம்மனுடை அருள் முழுவதுமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல், ஆடி செவ்வாய்க்கிழமைகளில், பெண்கள் எண்ணெய் தேய்த்துக் மஞ்சள் நீரில் குளித்து, அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், பெண்களின் சகல கஷ்டங்களும் நீங்கி விடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மேலும் படிக்க... நன்மை தரும் கால பைரவ வழிபாடு...

மேலும், வீட்டின் முற்றத்தில் வேப்பமரம் நட்டு வைப்பது என்பது நல்லது. இன்றும் நமது கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரம் இல்லாமல் இருக்காது. இது காற்றை சுத்தபடுத்தி ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யவும் கோடையில் ஏசி போட்டது போல குளுமையையும் தர வல்லது. அத்துடன் கிராம மக்கள் வேப்ப மரத்திற்கு மங்சள் இட்டு குங்குமமும் இட்டு வணங்குவார்கள். அவ்வாறு செய்தால் குல விருத்து அடைந்து அம்மனின் அருள் கிடைக்கு என்பது நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேப்பிலையின் பயன்கள்:

வேப்பிலை சாற்றின் ஏராளமான நன்மைகளைப் பற்றி தெரிந்த நம் முன்னோர்கள் காலங்காலமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இருந்து சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை வேப்பிலை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. வேப்பிலை மரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள் என ஒவ்வொரு பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன.

வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆரவைத்து வெதுவெதுப்பான சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு கொடுக்கவேண்டும்.

வேப்பிலை நீரை வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது நல்லது. இதனால் ரத்தம் சுத்தமாகும். காயம் உள்ள இடத்தில் அந்த நீரைக் கொண்டு கழுவி வந்தால் காயம் ஆறிவிடும்.

வேப்பம் பூக்களை பச்சடி அல்லது ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

வேப்பம் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வருபவர்களுக்கு பல்வலி, பல் பிரச்சினைகள் வராது. வேப்பிலையின் பல்துலக்கும்போது சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் படிக்க... எந்த தெய்வத்தை எப்போது வணங்குதல் சிறப்பு?

கோடைகாலத்தில் வேர்க்குரு, அரிப்பு, படை போன்ற வகையான நோய்களுக்கு வேப்பிலை மற்றும் அதன் பூக்கள் ஆகியவற்றை அரைத்து வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

வேப்பிலை கிருமி நாசினி என்பதால் சருமத்துக்கு தாரளமாக பயன்படுத்தலாம். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே முகத்தில் படியும் தூசுகள் தான். அதை முழுமையாக பாதிப்பில்லாமல் வெளியேற்ற வேப்பிலை உதவுகிறது.
Published by:Vaijayanthi S
First published: