ஜோதிடத்தில் 8ஆம் இடம் ஏன் மோசமாக சொல்லப்படுகிறது?

ஜோதிடத்தில் 8ஆம் இடம் ஏன் மோசமாக சொல்லப்படுகிறது?

எந்த கட்டத்தில் எந்த கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் வரும் என்பதை பார்த்தோம். இத்துடன் உங்கள் ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் வலிமையையும் உறுதிப் படுத்திக் கொண்டு ஒரு நல்ல ஜோதிடரைக் கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 • Share this:
  ஜோதிடத்தில் எட்டாம் இடம் என்பது ஒருவரது ஆயுளை குறிக்கும் ஸ்தானம் ஆகும். அத்துடன்,' ஒருவரது வாழ்க்கையானது எப்படி முடியும்?' என்பதை சூசகமாக சொல்லக் கூடிய ஸ்தானமும் கூட... எனவே, தான் இதனை 'துர்ஸ்தானம்' என்கிறோம்.

  இதனை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் எனில், பொதுவாக ஒருவர் ஜாதகத்தைக் கொண்டு அவருக்கு மரணம் இயற்கையாக நேருமா இல்லை விபத்து அல்லது இயற்கைக்கு மாறான விதத்தில் மரணம் நேருமா என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இதற்கு 8 ஆம் இடமும், 8 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களையும், 8 ஆம் அதிபதியடன் சேர்ந்து ஜாதக கட்டத்தில் வீற்று இருக்கும் கிரகங்களையும் கொண்டு நாம் அறிந்து கொள்ள இயலும்.

  பொதுவாக 8 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களை கொண்டு என்ன மாதிரியான விபத்துக்களை ஒரு ஜாதகர் சந்திக்க நேரிடலாம் என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். மேலும், எந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் சரி 6 -8 -12 ஆகிய இடங்களின் அதிபதிகள் பெரும்பாலும் தீய பலன்களை தான் தருவார்கள். அதிலும் ஒருவருக்கு வாழ்வில் ஏற்படும் கண்டங்களை ஜாதகத்தில் உள்ள 8 ஆம் இடத்தை வைத்துத் தான் நாம் அறிந்து கொள்ள இயலும்.அதனால் தான் எட்டாம் இடத்தை தீய ஸ்தானம் அல்லது துர்ஸ்தானம் என்று சொல்கிறோம். இதன் அடிப்படையில்....

  1. 8 ஆம் இடத்தில் சூரியன் இருந்து சுப கிரக பார்வைகள் எதுவும் இல்லை என்றால் அந்த நபருக்கு மத்திம ஆயுளை அந்த ஜாதக அமைப்பு தந்து விடும். அதன் படி 45 வயதில் நெருப்பினால் விபத்தை சந்திக்க இடம் உண்டு.

  2. சந்திரன் 8 ஆம் இடத்தில் இருந்தால், அதிலும் குறிப்பாக பாபருடன் சம்மந்தப்பட்ட இருந்தால் அந்த ஜாதகருக்கு தண்ணீரினால் அல்லது தண்ணீர் சம்மந்தமான வியாதிகளால் பிரச்சனை ஏற்பட இடம் உண்டு.

  3. செவ்வாய் 8 ஆம் இடத்தில் பாபர் சேர்க்கையுடன் சுப கிரக பார்வையை பெறாமல் இருக்குமே ஆனால் அவர் இயந்திரத்தை கையாளும் சமயத்திலோ அல்லது வாகன விபத்தின் மூலமாகவோ இறக்க நேரிடலாம்.

  4. புதன் 8 ஆம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு அந்த அமைப்பு தீர்க்க ஆயுளை தரும். அதனால் புதன் 8 இல் இருப்பது என்பது வரவேற்கத்தக்கது.

  5. குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு இருதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற இயற்கை உபாதைகளால் மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

  6. சுக்கிர பகவான் அசுபர் சேர்க்கை பெற்று... சுபர் பார்வை இன்றி 8 ஆம் இடத்தில் இருந்தால் பால்வினை நோய்கள் அல்லது சுக்லம் மூலம் பரவும் நோய்கள் ஏற்பட இடம் உண்டு.

  7. சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பது தீர்க்காயுளை தந்தாலும் கூட சதா காயம் அல்லது அடி பட்டுக் கொண்டே இருக்கும். மரணத்திற்கு நிகரான கண்டத்தை சனி பகவான் கொடுக்க வல்லவர்.

  8. ராகு பகவான் சுப கிரக பார்வைகள் இல்லாமல் அல்லது சுப கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் 8 ஆம் இடத்தில் இருந்தால் அவர்களுக்கு விபத்தின் மூலமாக மரணம் ஏற்பட இடம் உண்டு.

  9. அதே போல, கேது 8 ஆம் இடத்தில் வீற்று இருந்தால் விலங்குகளால் கண்டங்கள் ஏற்பட இடம் உண்டு. அத்துடன் ஐந்து அறிவு கொண்ட அனைத்து ஜீவ ராசிகளிடத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். அவைகளால் கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  மேலும் படிக்க...கோகுலாஷ்டமி தினத்தில் விரதம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

  இப்படியாக எந்த கட்டத்தில் எந்த கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் வரும் என்பதை பார்த்தோம். இத்துடன் உங்கள் ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் வலிமையையும் உறுதிப் படுத்திக் கொண்டு ஒரு நல்ல ஜோதிடரைக் கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இது ஒரு புறம் இருக்க, விபத்துக்களை தவிர்க்க கீழ்கண்ட வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்...

  “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

  உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோ முக்ஷீயமாம் அம்ருதாத்”

  பொருள் : “நான் முக்கண்ணணான சிவனைத் தியானம் செய்கின்றேன். எனக்கு நல்ல ஜன்ம வாசனைகளையும் (பந்தங்களையும்) ஆரோக்கியத்தையும் தர வேண்டும். பழுத்த பக்குவமடைந்த வெள்ளரிப்பழம் போல் என்னைப் பற்றுகளிலிருந்து விடுவித்து மரண பயம் போக்கிப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  மேற்கண்ட இந்த மந்திரத்தை உச்சரித்து பிரயாணம் செய்தால், எந்த ஒரு ஆபத்தும் - கண்டமும் நீங்கி விடும் என்பது ஐதீகம். அத்துடன், சாதாரணமாகவே மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்லும் போது ஆயுள் பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

  மேலும் படிக்க... தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய வழிகள்...
  Published by:Vaijayanthi S
  First published: