ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

பெருமாள்

பெருமாள்

புரட்டாசி மாதத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும். அதே சமயம் மழைக்காலமும் தொடங்கக் கூடிய நேரம் இது. வெயிலும் மழையும் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த சீதோஷண நிலை, வெயில் காலத்தை விட மிக மிக மோசமானது. இந்த சமயத்தில் அசைவ சாப்பாட்டை சாப்பிட்டால் நம்முடைய உடலில் சூடு அதிகமாகிவிடும். தேவையற்ற உடல் உபாதைகள் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால் தான் இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்று புரட்டாசி. ஆங்கில மாதங்களில் செப்டம்பர் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தியில் வரை இந்த மாதம் நீடிக்கிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாத சனிக் கிழமைகளில் இந்துக்கள் விரதம் இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கம். இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவது, புகைப்பழக்கம், மதுப் பழக்கத்தை நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

  புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணிக்கிறது. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் என்பது மகாவிஷ்ணுவின் சொரூபம் ஆகும். அதனால் புரட்டாசி மாதம் பெருமாளின் மாதமாக பார்க்கப்படுகிறது. புதன் சைவத்திற்கு உரிய கிரகம் ஆகும். எனவே, இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதத்தில் சனி தன்னுடைய வலிமையை இழக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது சனீஸ்வரனின் கெட்ட பலன்களைத் தடுத்து நன்மையைத் தரும் என்று கூறப்படுகிறது.

  மேலும் இதற்கு நமது முன்னோர்கள் பல அறிவியல் காரணங்களையும் கூறியுள்ளனர். பொதுவாக புரட்டாசி மாதத்தின் போதுதான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும் போது, அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.

  இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தின் சூடான காலநிலையைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை தரக் கூடியது. இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, நம் உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும்.

  மட்டன்

  இது போலதான் நமது முன்னோர்கள் ஆன்மிகத்தில் அறிவியலைப் புகுத்திய பல விரதமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு புகுத்தியுள்ளனர். உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியதோடு இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என  ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

  மேலும் படிக்க... பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்..

  மேலும் படிக்க... புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

  துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூலிகை ஆகும். பூச்சி, நோய்த் தொற்று அதிகரிக்கும் புரட்டாசி மாதத்தில் துளசி தண்ணீர் அருந்துவது நோய்த் தொற்றிலிருந்து உடலைக் காக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். புது மழை காரணமாக காலரா, ஹெபடைட்டிஸ் போன்ற தொற்று நோய்கள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது இத்தகைய நோய் பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...

  மேலும் படிக்க... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Meat, Purattasi