Home /News /spiritual /

காகத்திற்கு உணவு வைப்பதன் காரணம் தெரியுமா?

காகத்திற்கு உணவு வைப்பதன் காரணம் தெரியுமா?

காக்கைக்கு சிலர் தினமும் உணவு வைப்பார்கள். சிலருக்குச் சாதாரணமாகவே காக்கைக்கு சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். சிலர் பரிகாரங்களுக்காகவும் முன்னோர்களான பித்ருக்களுக்காகவும் சாப்பாடு வைக்கும் பழக்கம் உண்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம்.

    பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு செயல் தான் காக்கைக்கு சாதம் வைப்பது. காக்கைக்கு சாதம் வைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால்  இதில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்துள்ளன தெரியுமா? காக்கைக்கு சாதம் வைத்தற்கு காரணம் என்ன? என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

    நம் முன்னோர்கள் காகத்தை சனீஸ்வர பகவானாகவும், உணவை பகிர்த்து உண்பதில் அன்பின் சின்னமாகவும் நல்லது கெட்டது உள்ளிட்டவைகளை உணர்த்தும் சக்தியாகவும் பார்த்தனர். மேலும் நம் முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் வந்து நாம் வைக்கும் சாதத்தை எடுக்கின்றார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

    பொதுவாக ஏழரைச் சனியால் ஏற்படும் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மால் முழுமையாக தப்பித்துவிட முடியாது. ஆனால் அவரை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு முதலில் வாரம்தோறும் சனிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

    மேலும் படிக்க... செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்ய சரியான காலம் ...

    அத்துடன்  சனிக்கிழமைதோறும் வெள்ளை சாதத்துடன் எள் கலந்து காலை வேளையில் காகத்திற்கு வைக்க வேண்டும். காகத்திற்காக வைக்கப்படும் சாதத்தை குளித்துவிட்டு தான் சமைக்க வேண்டும். பச்சரிசி சாதமாக இருந்தால் இன்னும் சிறப்பு. வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து சனி பகவானை மனதார வேண்டி எள் சாதத்தை கொண்டு காகத்திற்கு வைப்பது மிகவும் நல்லது. இப்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவறாமல் செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் குறைவதை உங்களாலேயே உணர முடியும்.

    அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அதை காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது. உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும் என்பதும் நம்பிக்கை.

    மேலும் படிக்க... பரிகாரம் இல்லாத தோஷங்கள் என்னென்ன?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pariharam | பரிகாரம்

    அடுத்த செய்தி