கேள்வி : "நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்; கெட்டவர்கள் நன்றாக வாழ்வதுபோல் தோன்றுகிறதே?! இது எதனால்?"
சத்குரு விளக்கம் : நீங்கள் நான் நல்லவன் என்ற முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? 10 பேர் பாத்து அவன் சரி இல்லை. இவன் சரி இல்லை. எவனும் சரி இல்லைனு நீங்களே ஒப்பிட்டு பார்த்து இதுக்கு நான் சரி போலனு ஒரு முடிவிற்கு வந்து விட்டீர்கள். எப்ப உலகத்துல இருக்குறவங்க எல்லாரும் சரி இல்லை. நான் மட்டும் நல்லவன்னு நினைக்கிறீங்களோ அப்ப நீங்க கஷ்டப்பட்டே ஆகணும். நல்லவன் என நாமளே நினைக்க கூடாது. 10 பேர் சேர்ந்து கூறினால் அது நல்லா இருக்கும். நானே நான் நல்லவன் நல்லவன்னு நினச்சுக்கிட்டிங்கனா கஷ்டந்தான் வரும் உங்களுக்கு.
கேள்வி : இல்லை . நாம பிறர் செய்யுறதை செய்யாம நான் தீமை செய்யாமல் வாழ்கின்றேன். ஆனாலும் கடவுள் நம்மளை சோதிக்கின்றாரே என சில நேரங்களில் தோன்றுகிறதே, ஒரு எண்ணம் வருதே?
விளக்கம் : இதில் கடவுளுக்கு பங்கு கிடையாது. கஷ்டம் உருவாக்குறது நாம் தான். நம்ம உடம்புல ஆனந்தம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நம்ம உள்ளத்துல ஏற்படுற விஷயம் . நமக்கு கஷ்டம் வந்தா அது நமக்குள்ள வர நிகழ்ச்சி. நமக்குள்ள வர ஒரு விஷயத்துக்கு நாம மேல இருந்து உதவி கேட்கின்றோம். நமக்குள்ள வர இன்பமும், துன்பமும் நாமளே உருவாக்குறது. வெளில வர விஷயங்கள் நம்மள மீறி வெளில நடக்குற விஷயங்களுக்கு நீங்க நமக்கு அப்பார் பட்ட விஷயங்களுக்கு அப்பார் பட்ட சக்தியை கும்பிடுறீங்க. ஆனந்தமும், துன்பமும் நமக்குள் இருக்கும் ஒன்று.
அதனை நாம் பார்த்துக்கொண்டால் போதும். அதற்க்கு அப்பபாற் பட்டதை மேல இருக்கிறவன் பாத்துப்பான். இந்த உலகத்துல வெற்றி கிடைக்கணும்னா திறமை வேணும். நான் நல்லவன் என நினைத்து முட்டாளாக வாழ்ந்தால் வராது. நீங்க இன்னொருத்தனை கெட்டவன் நினைச்சுக்கலாம். ஆனால் அவன் புத்திசாலியாக வாழுறான். அவனுக்கு நன்மை வருது.ஆனந்தமாக இருப்பதே ஒரு திறமை தானே
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sadhguru