Home /News /spiritual /

MahaShivRatri2022 : ஏன் சிவன் பாதி பெண்ணாக மாறினார்?

MahaShivRatri2022 : ஏன் சிவன் பாதி பெண்ணாக மாறினார்?

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி

MahaShivRatri2022 : இப்ப நாம யோகானு சொல்லுறப்ப எல்லாத்தையும் அரவணைத்து கொள்ளும் ஒரு பரிமாணத்தை பத்தி பேசுறோம். யோகா ஒரு உடற்பயிற்சியோ , ஆரோகியத்துக்கான விஷயமோ இல்லை. இது மனிதனோட உட்ச பச்ச நல்வாழ்வோட தொடர்புடையது.

    சிவனின் நேரடி சீடரும், பக்தருமான ப்ருகு முனியின் கதையை சத்குரு விவரிக்கிறார். சிவன் அர்தநாரியாகி, மாதொரு பாகனாக அவருக்கு காட்சி அளித்தார். ஒரு முழுமையான உயிராக ஆவதற்கு, ஒருவர் தனக்குள் இருக்கும் ஆண்தன்மையையும், பெண்தன்மையையும் சரிசமமாக வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பற்றியும் பேசுகிறார்.

    சிவனை யோக மரபில் கடவுளாகப் பார்க்கவில்லை. ஆதியோகியாகப் பார்க்கின்றோம். ஆதியோகி என்றால் முதல்யோகி. அவரு தான் ஆதிகுரு. அப்படினா முதலாவது குரு. இன்றைக்கு யோகா நமக்கெல்லாம் கிடைக்குதுனா பெண் தன்மையின் விளையாட்டால தான். சிவனை சொல்லிக்கொடுக்கச் சொல்லி பார்வதி கட்டாயப் படுத்தினாங்க. அவராவே அதனை செய்திருக்க மாட்டாரு. அதனால தான் சிவன் முதல் குருவாக ஆனாரு. அதன் மூலமாக சிசியர்களும், பக்தர்களும் உருவானாங்க. முதல் 7 சிசியர்களுக்கு அவர் யோகாவை வழங்குனாரு. அவர்களை சப்தரிஷிகள்னு சொல்றோம்.

    இந்த சப்தரிஷிகள்ல ஒருதரான அகத்தியர் முனி கிட்ட இருந்து தான் தென்னிந்திய மறைநியானம் வந்தது. அவர் தான் நமக்கு எல்லாமே. நமக்குத் தெரிந்த எல்லாமே அவரிடம் இருந்து தான் வந்தது. சிவனோட நேரடி சீடர் அகத்தியர்.



     

    இன்னொரு சிசியர் ப்ருகு. ப்ருகு சிவன் மேல் தீவிர பக்தி உடையவராக இருந்ததால அவர் பெண் தன்மை உடையவரா ஆனார். ஏனென்றால் பக்தி என்பது பெண் தன்மை உடையது. சிவனோட பெரும் பக்தராக அவர் ஆனார். அதனால தினமும் 3 முறை சிவனை சுத்தி வளம் வந்தாரு.



    சிவனை சுற்றி வராமல் ஒரு நாளை அவர் தொடங்க மாட்டாரு. பார்வதி அங்க இருந்தாங்க அவங்களும் அப்ப முழுமையான ஞானோதயம் அடைஞ்சுருந்தாங்க. ஆனால் ப்ருகு முனிவர் அவர்களை முழுமையாக புறக்கணிச்சாறு. சிவனை மட்டுமே அவரு சுத்தி வந்தாரு. ரெண்டு பேரையும் அவரு சேர்த்து சுத்தவே இல்லை.
    இதனால் பார்வதி கொஞ்சம் எரிச்சல் ஆனாங்க. ஒரு நாள் சிவனுக்கு கொஞ்சம் நெருக்கமாக உக்காந்தாங்க. ப்ருகு முனிவர் வந்தாரு. பார்வதியை விட்டுட்டு சிவனை சுத்துறதுக்கு இடமே இல்லை. அதனால பார்வதியை தள்ளி உட்கார சொன்னாரு. இது பக்தர்களோட வழி அவங்க காரண அறிவுக்கு உட்பட்டு இருக்குறது இல்லை. ரொம்ப பெண்தன்மை கொண்டவங்க ஆனா தீவிரமானவங்க. பார்வதி சொன்னாங்க நான் ஏன் நகரனும். ப்ருகு முனிவர் சொன்னாரு நான் சிவனை மட்டும் தான் சுற்றுவேன். உங்களை சுத்த முடியாதுனு சொன்னாரு.



    ப்ருகு பாத்தாரு சிவனை மட்டும் சுத்துறதுக்கு போதுமான இடம் கிடைக்கல. அதனால தன்னை ஒரு எலியாக மாத்திக்கிட்டு சிவனை மட்டும் சுத்தி வளம் வந்தாரு. பார்வதியை விட்டுட்டாரு. சிவன் தன் மனைவிக்கும், பக்தருக்கும் இடையில நடக்குற சண்டையால கொஞ்சம் குதுகலமாக இருந்தாரு. (சிரித்து கொண்டே கூறினார் ).
    இது எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் பார்வதியை இழுத்து தன் மடிமேல வச்சுக்கிட்டாரு. ப்ருகு என்ன செய்யுறாருனு பாத்தாங்க. ப்ருகு முனி தன்னை ஒரு பறவையாக மாத்திக்கிட்டு சிவனை மட்டும் சுத்தி வந்தாரு. சிவன் இந்த பக்தியை பார்த்து தன் மனம் குளிர்ந்து பூரிப்பு அடைந்தாரு. தன் பக்தர் தன்னோட பக்தியை வெளிப்படுத்துற விதத்தாலையும் , தான் பாரபட்சம் காட்டுறதை பார்த்து பார்வதி எரிச்சல் அடையுறதுனாலயும் குதூகலம் அடைந்தாரு. சிவன் அடுத்து சரி இப்ப என்ன செய்யுறாரு பாப்போம்னு பார்வதியை தன்னோட ஒரு பாகமாக இணைச்சு கிட்டாரு. சிவன் பாதி பார்வதியாக ஆனாரு. பாதி பெண் , பாதி ஆண்.

    ஒருத்தர் தன்னை முழுமையாக வளர்ப்பது எப்படினு தெரிஞ்சுக்கிட்டாருனா இது பாதி ஆண், பாதி பெண்ணாக ஆகும். அப்படித் தான் இருக்கும். இந்த நிலை தான் அர்தநாரி. இதுல சிவன் பாதி ஆண் , பாதி பெண்ணாக இருக்காரு. பார்வதியை தனது பாகமாக இணைச்சு கிட்டாரு. தன் பக்தர் அப்ப என்ன செய்வாருனு பாக்க நினைச்சாரு. இப்ப ப்ருகு தன்னை ஒரு தேனீயாக மாத்திக்கிட்டு சிவனோட வலது காலை மட்டும் சுத்தி வந்தாரு.



    இத பார்த்த சிவனும் , பார்வதியும் சிரிச்சுகிட்டே பேசிக்கிட்டாங்க. ப்ருகு முனியின் இந்த குழந்தைத் தனமான பக்தி ரொம்ப மகிழ்ச்சியூட்டுவது போலவும், அற்புதமாகவும் இருந்துச்சு. அதே சமயத்துல ப்ருகு தன்னோட பக்கத்தியிலேயே தொலைஞ்சு போய் ப்ரபஞ்சத்தோட உச்ச பட்ச இயல்பை தெரிஞ்சுக்காம போய்ட கூடாதுனு சிவன் நினைச்சாரு. அதனால சித்தாஷ்னான்ற யோக ஆசனத்துல சிவன் உட்கார்ந்தாரு. அந்த நிலையில ப்ருகு முனியால தன்னைவலம் வர முடியாதுனு நினைச்சாரு. அப்படி பண்ணணும்னா அவரு பெண் தன்மை, ஆண் தன்மை எனும் இரண்டையும் சேர்த்து வளம் வரணும்.



    இப்படித் தான் இந்த உடல் பாதி ஆண் , பாதி பெண் ஆனது. ஆண் தன்மையும் , பெண் தன்மையும் சம அளவுல கொண்டு இருக்கு. ஒருத்தர் இதனை எப்படி வளக்குறதுனு தெரிஞ்சுக்குட்டா இரண்டுமே ஒவ்வொரு மனிதர் கிட்டயும் முழு உயிர்போட செயல் பாட்டோட இருக்கும். இந்த இரண்டு பகுதியையும் சமமான தீவிரத்தோட அதிர்வுற செய்தோம்னா நம்ம ஒவ்வொருத் தரும் 100% ஆணாகவும் 100% பெண்ணாகவும் இருக்க முடியும். யோக விஞ்ஞானமே இதனை சார்ந்து தான் இருக்கு. அதாவது உங்களுக்குள் இருக்கும் ஆண் தன்மை மற்றும் பெண் தன்மையை தவற விட கூடாது. ஏதாவது ஒன்னு மட்டும் இருந்தா சமநிலை தவறிய வாழ்க்கையாக ஆய்டுவோம்.



     

    இப்ப நாம யோகானு சொல்லுறப்ப எல்லாத்தையும் அரவணைத்து கொள்ளும் ஒரு பரிமாணத்தை பத்தி பேசுறோம். யோகா ஒரு உடற்பயிற்சியோ , ஆரோகியத்துக்கான விஷயமோ இல்லை. இது மனிதனோட உட்ச பச்ச நல்வாழ்வோட தொடர்புடையது. அதுல வாழ்க்கையோட எந்த அம்சத்தையும் ஒதுக்க முடியாது. எல்லா பரிமாணங்களையும் கடந்த பரிமாணத்தை அடைவது இது. அது ஒரு அமைப்பு முறை. அது ஒரு வழிமுறை. அதன் மூலமாக உங்கள் உடல் அமைப்பையே தெய்வீகத்தை அடைவதற்கான ஏணிப் படியாக பயன்படுத்தலாம். உங்க உடம்பை , உங்க மனசை , உங்க சக்தியை தெய்வீகத்தை அடைவதற்கான ஒரு ஏணிப் படியாக ஆக்கி கொள்ள முடியும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Sadhguru

    அடுத்த செய்தி