ஆடி மாதத்தில் ஏன் சுப நிகழ்ச்சிகள் செய்யப்படுவதில்லை? காரணம் தெரியுமா?

மாதிரி படம்

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தை ஆடி மாதத்தில் தவிர்த்தனர்.

 • Share this:
  ஆடி மாதம் மிகவும் அற்புதமான மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இதன் பின்னணியில் நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள  விஷயங்கள் குறித்து தெரிந்து கொண்டால் ஆடி மாதத்தின் அற்புதம் நமக்கு புரியும்.

  ஆடி மாதத்தில் விசேஷங்களும் திருவிழாக்களும் அதிகமாக வரும், அதனால் அனைவரும் கோவிலுக்கு செல்வதும், குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கமும்  கொண்டிருப்பார்கள். கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்தனர். அது மட்டும் அல்லாமல் மழைக்காலம் என்பதால் ஆடியில் விவசாயிகளும் விதை விதைப்பார்.

  Aadi | ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்...

  அதனால் விவசாய பணிகள் மும்மரமாக நடைபெறும். மேலும் அனைத்து கோவில்களிலும் தொடர்ந்து விசேஷ நிகழ்வுகள் நடைபெருவதால் குருக்கள் முதல் பூசாரி வரை அனைவரும் பிஸியாக இருப்பர். அதனால் அவரகளை அழைத்து சுபகாரிங்கள் செய்யவது என்பது சற்று கடினமாக இருக்கும்.

  மேலும் படிக்க... ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா?

  ஆடி மாதத்தில் பெண் கருவுற்றால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். கோடை காலமான சித்திரை மாதத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பிறக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் ஒரு இதமான காலமாக இருக்காது. அதனால் ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தை ஆடி மாதத்தில் தவிர்த்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... ஆடி முதல் நாள் குலதெய்வத்தையும் அம்மனையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் நல்லது...

  அதே நேரம் முக்கிய பல விசேஷங்களை செய்ய சிறப்பான மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வீடு, நிலம் சார்ந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம் என்பதற்காகவே வாஸ்து புருஷன் நித்திரை விடுவதால் தாராளமாக கிருஹப்ரவேசம், வேறு வீடு குடியேறுதல், புதிய நிலம், வீடு வாங்குதல் போன்ற விஷயங்களை செய்யலாம்..

  மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் அனைவரும் அதிகமாக கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ள பூஜை அறையில் அமர்ந்து விருப்பமான கடவுளை மனதில் நிறுத்தி சாமி தரிசனம் செய்வது நல்லது.
  Published by:Vaijayanthi S
  First published: