• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருமணமும் ஜோதிடமும்... விவாஹத்திற்கு ஏன் 10 பொருத்தங்கள் முக்கியம்?

திருமணமும் ஜோதிடமும்... விவாஹத்திற்கு ஏன் 10 பொருத்தங்கள் முக்கியம்?

திருமணம்

திருமணம்

ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது.  ஒரே ராசி - ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும். பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நக்ஷத்திரம் என்பதால்) அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள்.

  • Share this:
    திருமணம் பொருத்தம்

    ஆண், பெண் என இரு பாலரின் நக்ஷத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப் போகும் என்பதை கணக்கிடுவது தான் பொருத்தம் பார்ப்பது. பொதுவாக ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது பிறகு காலத்தின் மாற்றதால்  22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது. இது இன்றைய காலத்தில் 10 முக்கியப் பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து உள்ளது.

    சிலர் ஜோதிடரை சந்தித்து 10 இல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஆனால் பத்துமே முக்கியம் தான். ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. அதாவது புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்த ராமருக்கும், ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்த சீதைக்கும் கூட எட்டு பொருத்தம் தான் வருகிறது என்ற நிலையில் நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது அதிர்ஷ்டம்தான்.

    இதனை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக 'எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்?' என்று கேட்டால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியம் நூற்றுக்கு, நாற்பது மதிப்பெண் அதாவது ஜஸ்ட் பாஸ். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். அப்படி மீறி செய்தால் இருவரும் வெவ்வேறு அலைவரிசையில் இருப்பார்கள். ஆணுக்கு குளிர் பானங்கள் பிடித்தால் பெண்ணிற்கு சூடான பானங்கள் பிடிக்கும். இப்படி சின்ன, சின்ன விஷயங்களில் வரும் கருத்து வேறுபாடு பிற்காலத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும்.

    மேலும் படிக்க...ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?



    பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். எனினும் ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைவது இல்லை?

    அனைத்துப் பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு. நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நக்ஷத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள். ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது.

    காரணம் அது ராகு/ கேது தோஷம். இந்த மாதிரி தோஷம் உள்ளவர்களுக்கு  திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும். அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம். இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது.

    அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள் இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம். இதே போல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும். ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.



    மேலும் படிக்க... இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்...

    ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது?

    பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது.  ஒரே ராசி - ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும். பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நக்ஷத்திரம் என்பதால்) அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள்.

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான் 

    ஏனெனில் கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம். அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார். அதை விட்டு, விட்டு இருவருக்கும் ஒரே சமயத்தில் மோசமான தசா பலன் வந்தால் குடும்பத்தை பார்க்க முடியாது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள முடியாது.  இதனால் தான் ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர் பெரியவர்கள்.

    அக்கினி நக்ஷத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

    கோடையின் உச்ச கட்ட வெயில் இதனை கத்திரி வெயில் என்று சொல்வார்கள். இது மே மாதத்தில் வரும் சுமார் 26 நாட்கள் ஆகும். இதனை பஞ்சாங்கங்களில் அக்கினி நக்ஷத்திரம் என்பர். இந்தக் காலத்தில் திருமணம் செய்வது தவறில்லை. மற்றபடி, குழந்தை பிறந்தால் அக் குழந்தை, குழந்தையை பெற்ற தாய் என இருவருமே அக்கினி தோஷத்தால் பாதிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகலாம். இதற்கு பெரியவர்கள் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைத்து விடுவார்கள். தவிர சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு அவ்வளவு நல்லதல்ல என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால், இது முற்றிலும் ஆதாரம் அற்றது. மற்றபடி அக்கினி நட்சத்திரத்தில் தோஷ காலத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். அதில் தவறில்லை.

    திருமணம்
    மாதிரிப்படம்


    மேலும் படிக்க... அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்

    பத்து பொருத்தங்கள் 

    1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.

    2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு.

    3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும்.

    4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும்.

    5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும்.

    6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும்.

    7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும்.

    8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.

    9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள்.

    10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: