Home /News /spiritual /

MahaShivRatri 2022 : சிவனின் பெற்றோர்கள் யார்? சத்குரு விளக்கம்

MahaShivRatri 2022 : சிவனின் பெற்றோர்கள் யார்? சத்குரு விளக்கம்

 சத்குரு விளக்கம்

சத்குரு விளக்கம்

MahaShivRatri 2022 : சிவனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்கும்போது, அம்மையும் அப்பனும் இல்லாதவன் எனச் சொல்லப்படும் சிவனின் பிறப்பு எதிலிருந்து நிகழ்ந்தது என்பதை சத்குரு அவர்கள் சிவன்- பார்வதி திருமண நிகழ்வைக் கூறி விளக்குகிறார்.

மேலும் படிக்கவும் ...
கேள்வி : சிவனுக்கும் , இசைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி என் மனதில் உள்ளது?

சத்குரு பதில் : இந்த கேள்விக்கு ஒரு அழகான கதை சிவனின் வாழ்வில் உள்ளது. பார்வதி பருவதை ராஜன் உடைய பொண்ணு. அவளுக்கு சிவனை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது. அவனைத் தான் செய்து கொள்வேன் என உட்கார்ந்து விட்டார். எல்லாரும் சிவனை பார்த்து அவன் பெரிய ஆளுனு சொல்ல பார்வதி சிவன் ஒரு பெரிய ராஜானு நினைச்சாங்க. அவனும் வந்தான். அவனோட கூட்டத்தோட கல்யாணத்துக்கு எல்லாம் தயார் ஆயிடுச்சு. அவன் வேறு ஒரு உருவத்துல மனித உருவத்துல இல்லாம பல விதமாக இருக்குறாங்க. அப்டி வந்தான். மனித உருவம் கிடையாது. எல்லாரும் பாக்குறதுக்கு போதையில இருக்குற மாதிரி இருக்குறாங்க.

சிவன் வந்தான் அவனோட மேல தலையில இருந்து கீழ வரைக்கும் பஸ்பம். ஒரு யானை தோல் கட்டிட்டு அவனும் அப்டியே போதையில வரான். இத பார்த்து அப்படியே பார்வதியோட அம்மா மீனா மயக்கம் அடைந்து கீழே விழுந்துட்டாங்க. தாங்க முடியாம. ஐய்யோ இவனுக்கு போய் எப்படி நாம பொண்ணு கொடுக்கிறது. அவன் கூட்டம் பார்த்தா இப்டி இருக்குதேனு நினச்சு கீழ விழுந்துட்டாங்க.



அப்ப பார்வதி போய் சிவன் கிட்ட கேட்டாங்க. இப்டி வேண்டாம். எனக்கு நீ எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனா எங்க அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. கொஞ்சம் ஒரு அழகான உருவம் காட்டு. அப்ப சரினு சொல்லி ரொம்ப அழகான உருவம் எடுத்தான். சுந்தர மூர்த்தியாக வந்தான்.



வந்து உட்கார்ந்தான். பொண்ணு வீடு பத்தி பேச ஆரம்பிச்சாங்க. பொண்ணோட பரம்பரை அவங்க வீடு பத்தி பேச ஆரம்பிச்சாங்க. அவங்க அப்பா ராஜா அவங்க பரம்பரை இவ்ளோ சாதனை பண்ணிருக்காங்க பேச ஆரம்பிச்சாங்க. அடுத்து மாப்பிள்ளை பத்தி பேச ஆரம்பிச்சாங்க. அடுத்து சிவன் பத்தி கேக்குறாங்க. யாரும் ஒன்னும் சொல்லல. என்ன அவரு தாய், தந்தை யாரு என்னனு பருவதராஜன் கேட்குறாங்க யாரும் ஒன்னும் சொல்லல.



சிவன் சும்மாவே உட்கார்ந்து இருக்காரு. ரொம்ப நிசப்தம். எல்லாருக்கும் பயம் வந்துருச்சு. கல்யாணம் நடக்குமோ இல்லையோ? தாய், தந்தை பெயர் கேட்டா யாரும் ஒரு மூச்சு விட மாட்டுகாங்க? பரம்பரை பத்தி கேட்டா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டுக்காங்க ? அப்ப நாரத முனி இடையில எல்லா கேள்விக்கும் இடையில இசைக்கருவி எடுத்து டுவைன் , டுவைனு பண்ணாரு. அப்ப பருவத ராஜாவுக்கு கோவம் வந்துருச்சு. இது என்ன தாய் , தந்தை பெயரை கேட்டா டுவைன், டுவைன் பண்றயா நீயுனு கோவம் வந்துருச்சு?



என்னென்னா? அவனுக்கு இசை தான் தாய் , தந்தை. அவனுக்கு தாய், தந்தை கிடையாது. இசை தான் அவனுக்கு தாயும், தந்தையும். அதனால தான் நாரத முனி ஒவ்வொரு கேள்விக்கும் டுவைன், டுவைனு எடுத்து அடிச்சுருக்காரு. அதனால தான் இசை கருவி வாசிக்கும் முன்னர் சிவனை வணங்கும் வழக்கம் வந்தது. சிவனின் அடிப்படையே இசை தான்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sadhguru

அடுத்த செய்தி