எந்தெந்த திதியில் எந்தெந்த விநாயகரை வணங்குதல் சிறப்பு...

விநாயகர் சிலை

எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் மூவுலகிலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்துதான் ஆரம்பிப்பர். அந்த வகையில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்வோம் வாங்க...

 • Share this:
  அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக (“0” டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.

  விளக்கமாக கூறுவதாயின்; சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பூர்வபக்க பிரதமை முதல் அமாவாசை வரையான 30 திதிகளாகும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரைன காலத்தில் வரும்) 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும்; தேய் பிறை காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும்

  சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

  அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய “பிரதமையும்”. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள்.

   

  1.அமாவாசை : நிருத கணபதி
  2.பிரதமை : பால கணபதி
  3.த்விதியை : தருண கணபதி
  4.திருதியை : பக்தி கணபதி
  5.சதுர்த்தி: வீர கணபதி
  6.பஞ்சமி: சக்தி கணபதி
  7.சஷ்டி : த்விஜ கணபதி
  8.சப்தமி : சித்தி கணபதி
  9.அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி
  10.நவமி : விக்ன கணபதி
  11.தசமி : க்ஷிப்ர கணபதி
  12.ஏகாதசி : ஹேரம்ப கணபதி
  13.துவாதசி : லசுட்மி கணபதி
  14.திரையோதசி : மகா கணபதி
  15.சதுர்த்தசி : விஜய கணபதி
  16.பவுர்ணமி : நிருத்ய கணபதி

  மேலும் படிக்க... விநாயகரின் 32 வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

  அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள். .

  மேலும் படிக்க... தோஷங்கள் நீக்கும் விநாயகர்... 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்...

  புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிகள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.

  மேலும் படிக்க... விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: