முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இந்த கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் சௌபாக்கியம் பெருகுமாம்!

இந்த கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் சௌபாக்கியம் பெருகுமாம்!

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல்

எண்ணெய் தேய்த்து குளித்தால் சனி தோஷம் விலகும். சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும் என வேத சாஸ்த்திரம் கூறுகிறது. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும். சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நீங்கி நன்கு வளரும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி அன்று அனைவரும் எண்ணெய் வைத்து குளிப்பது வழக்கம். ஜோதிடம் மற்றும் மருத்துவ ரீதியாக தலைக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் வைத்து பல ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் நமக்கு நிக்கவும், சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாததால் நேரம் கிடைத்தாலும் தனிப்பட்ட வேலைகளுக்கே நேரம் சரியாக இருப்பதால், இதற்கு நேரம் கிடைப்பதில்லை. இன்னும் சிலர், ஞாயிறன்று விடுமுறை என்பதால் தலைக்கு என்னை வைத்து குளிக்கின்றனர்.

ஆனால், அது தவறு என்பது உங்களுக்கு தெரியுமா?. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திகதி, கிழமைகளில், எண்ணெய் வைத்து குளிக்க கூடாது என்பது ஐதீகம். அதுமட்டும் அல்ல, ஞாயிற்று கிழமை சனி நீராடு என்று கூறப்படுகிறது. ஆண்களும், பெண்களும் எந்த கிழமைகளில் என்னை வைத்து குளிக்கலாம், அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.

எந்த கிழமையில் எண்ணெய் வைத்து குளிப்பது நல்லது :

ஆண்களுக்கு :

ஞாயிறு எண்ணெய் குளியல் - இருதயத்தில் தாபம்.

திங்கள் எண்ணெய் குளியல் - பொழிவு தரும் மேனி.

செவ்வாய் எண்ணெய் குளியல் - அற்பாயுள்.

புதன் எண்ணெய் குளியல் - செல்வநிலை மேலோங்கும்.

வியாழன் எண்ணெய் குளியல் - தரித்திரம் தாண்டவம் ஆடும்.

வெள்ளி எண்ணெய் குளியல் - ஆண்களுக்கு ஆபத்தை தரும்.

சனி எண்ணெய் குளியல் - தீர்க்காயுள் தரும்.

Also Read | இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பண கஷ்டம் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்!

பெண்களுக்கு :

செவ்வாய் எண்ணெய் குளியல் - பாக்ய விருத்தி தரும்.

வெள்ளி எண்ணெய் குளியல் சௌபாக்கியவதியாக வாழ்வார்கள்.

எண்ணெய் குளியல் முறை:

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலை 6.30 மணிக்குள் குளித்து முடித்துடிட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வாரம் இருமுறை அதாவது, ஆண்கள் - புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் - செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு.

எண்ணெய் குளியல் நன்மைகள்:

ஜோதிடம் ரீதியாக, எண்ணெய் தேய்த்து குளித்தால் சனிதோஷம் விலகும். சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் சரியாகும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்களும் தீரும். சுக்கிரனின் காரகமான முடி கொட்டும் பிரச்சனை தீரும்.

மருத்துவ ரீதியாக, உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலை மயிர் நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

First published:

Tags: Astrology, Guru pooja, Hair oil, Sani Peyarchi