2021ல் யோகங்களை அள்ளித்தரும் நட்சத்திர கல் : எந்த ராசிக்காரர்கள் என்ன கல் அணியலாம்?

மாதிரி படம்

இந்த ஆண்டு வாழ்கை வளமானதாக மாற்ற மக்களுக்கு ராசிக்கல்கள் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளன.

  • Share this:
புத்தாண்டில் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் மக்களுக்கு ராசிக்கல்கள் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளன. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்கல் அதிக பலன்களைக் கொடுக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம்: கார்னெட் (Garnet)

லட்சியத்தோடு வாழும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் அச்சமற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆர்வம், மன வலிமை காரணமாக தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு. இத்தகைய குணங்களைப் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு கார்ன்ட் (Garnet) ரத்தினக்கல் மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும். இந்த கல்லை அணிந்திருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், நீடித்த புகழும் கிடைக்கும்.

ரிஷபம்: ஓபல் (Opal)

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இலக்குகளை அடைய கடினமாக உழைக்கும் ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதை நோக்கமாக கொண்டிருப்பார்கள். 2021ம் ஆண்டில் இவர்களுக்கு ஓபல் (Opal) ராசிக்கல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். இது மற்றவர்களுடனான உறவை வலுப்படுத்தவும், மகிழ்ச்சியையும் அன்பையும் அள்ளிக்கொடுக்கும்.

மிதுனம்: ஜேட் (Jade)

புதனின் ஆட்சிப்பெற்ற மிதுன ராசிக்காரர்கள் அதிவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஜேட் (Jade) ராசிக்கல் உதவும். எப்போதும் அதிவேகமாக செயல்படுபவர்களை அமைதிப்படுத்த ஜேட் ராசிக்கல் உதவுகிறது. எண்ணங்களில் சமநிலையை ஏற்படுத்தி ஞானத்தைக் கொடுக்கிறது. எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களில் மிதுன ராசிக்காரர்கள் பயணிக்க இந்த ராசிக்கல் உதவும்.

கடகம்: மூன்ஸ்டோன் (Moonstone)

இயல்பான குணாதிசயங்களை உடைய கடக ராசிக்காரர்கள், மற்றவர்களை எளிதில் எடைபோடும் திறன்படைத்தவர்கள். சந்திரனின் அட்சியில் இருப்பதால் இவர்களுக்கு இந்த ஆண்டில் மூன்ஸ்டோன் கல் பயன்படும். இந்தக் கல் வணிகத்திலும், வாழ்கையிலும் வெற்றியை நிலைநாட்ட இவர்களுக்கு உதவுகிறது. மன அமைதியை ஏற்படுத்துவதுடன் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது. திடமான மனநிலையில் இருக்க இந்த ராசிக்கல் கடக ராசிக்காரர்களுக்கு உதவும்.



சிம்மம்; ரெட் ஸ்பைனல் (Red Spinel)

சூரியனின் ஆட்சிப்பெற்ற சிம்ம ராசிக்காரர்கள் எந்தவொரு செயலில் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துவார்கள். லட்சியத்துக்காக உழைக்கும் அவர்கள், அந்த எண்ணத்தினாலேயே மன அழுத்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. ரெட்ஸ்பைனல் (Red Spinel) ரத்தினக்கல் இத்தகைய மனக்குழப்பத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு உதவியாக இருக்கும். மனச்சோர்வைக் குறைத்து புதிய வழியில் பயணிக்கு இந்தக் கல் அவர்களுக்கு பயன்படும்.

கன்னி: பச்சை டூர்மலைன் (Green Tourmaline)

புதன் ஆட்சி பெற்றிருக்கும் கன்னி ராசிக்காரர்கள், சிறந்த முறையில் திட்டமிடுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மனதை அலைபாயவிடுவார்கள். பச்சை டூர்மலைன் (Green Tourmaline) ரத்தினக்கல், அவர்களை மனம் அலைபாய்வதில் இருந்து தடுத்து புத்துயிர்பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ உதவும். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும், அறிவாற்றலையும், மன ஒரும்பாட்டை மேம்படுத்தவும் கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சை டூர்மலைன் ராசிக்கல் உதவியாக இருக்கும்.

துலாம்: வெள்ளை குவார்ட்ஸ் (White Quartz)

சுக்கிரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய அவர்களுக்கு எப்போதும் மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எந்தவொரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய கடினமாக உழைக்கும் துலாம் ராசிக்காரர்கள், வெள்ளை குவார்ட்ஸ் (White Quartz) ராசிக்கல்லை பயன்படுத்தினால் இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அடிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆன்மீக நாட்டத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம்; கார்னிலியன் (Carnelian)

ஒருவரை மனக்கண்ணில் எடைபோடுவதில் வல்லவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். உணர்ச்சிவசப்பட்டாலும் உறுதியாக இருக்கும் அவர்கள், மற்றவர்களும் தங்களைப்போல் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். செவ்வாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் உடல் ஆற்றலை அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனால் களைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கார்லியன் (Carnelian) ராசிக்கல்லை பயன்படுத்துவது நல்லது. இது அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.



தனுசு: சிட்ரின் (Citrine)

குருபகவானின் ஆட்சிப்பெற்ற தனுசு ராசிக்காரர்கள் லட்சியத்துக்காக கடினமாக உழைக்ககூடியவர்களாக இருப்பார்கள். சாகசங்களை படைப்பார்கள். அன்பு நிறைந்திருக்கும் இவர்களுடன் குடும்பம், நட்பு வட்டமும் எப்போதும் சூழ்ந்திருக்கும். சிட்ரின் (Citrine) ரத்தினக் கல்லை பயன்படுத்தினால் இந்த ஆண்டில் ஏற்படும் குழப்பங்களை தவிர்த்து மனம் அமைதியான திசையில் பயணிக்க உதவும். தனித்துவம் மற்றும் சுயமரியாதையுடன் வாழவும் சிட்ரின் ரத்தினக் கல் தனுசு ராசிக்காரர்களுக்கு உதவுகிறது.

மகரம்; அமேதிஸ்ட் (Amethyst)

சனியின் ஆட்சிப்பெற்ற மகர ராசிக்காரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகையும் வெல்லும் திறன் தங்களுக்கு இருப்பதாக நினைக்கும் அவர்கள், தங்களின் இலக்கை அடைய கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதனால், மனக்குழப்பம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அமேதிஸ்ட் (Amethyst) ராசிக்கல் அவர்களை இத்தகைய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். புது கிரியேடிவ் சிந்தனைகளை உங்களுக்குள் உருவாக்கி, குழப்பமான மனநிலையில் இருந்து வெளியேற இந்த ராசிக்கல் உங்களுக்கு உதவும். போதைப்பழக்கத்திலிருந்து உங்களை மீட்டு, நீங்கள் யார் என்பதை உணர உதவும்.

கும்பம்: அயோலைட் ( Iolite)

சிறந்த சிந்தனை மற்றும் தனித்துவமான மன திறன்களைக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் சனி கிரகம் ஆளும் ராசியாகும். கமுக்கமான சுபாவம் உடைய கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக எப்போதும் நிலையற்றவர்களாக இருப்பார்கள். எண்ண ஓட்டத்தில் நிலைப்பெற்று நல் வழியில் பயணிக்க அயோலைட் ( Iolite) ராசிக்கல்லை அவர்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம், உள்ளுணர்வு, மனவலிமைப்பெற்று தன்னம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது. உறவுகளுக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை நீக்கவும் இந்த ராசிக்கல் உறுதுணையாக இருக்கும்.

மீனம்: மஞ்சள் புஷ்பராகம் (Yellow Topaz)

வியாழனால் கட்டுப்படுத்தப்பபடும் மீன ராசிக்காரர்கள் அதிக ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் நிறைந்து இருக்கும். இதனால் எளிதில் சோர்வடைய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் புஷ்பராகம் (Yellow Topaz) ரத்தினக்கல்லை பயன்படுத்துவது நல்லது. இந்தக் கல் அவர்களின் வாழ்க்கையில் செழிப்பையும், நிலையான வாழ்க்கை வாழவும் உதவும். இந்தக் கல்லை அணிவதன் மூலம் லட்சியங்களில் வெற்றிடைவார்கள்

 

 
Published by:Sivaranjani E
First published: