Home /News /spiritual /

ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்...

ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்...

ஒவ்வொரு கிழமையும் இந்த விஷயங்களை செய்தால் நமக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பொருட்களை வாங்க எந்த கிழமை ஏற்றது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு கிழமையும் இந்த விஷயங்களை செய்தால் நமக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பொருட்களை வாங்க எந்த கிழமை ஏற்றது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு கிழமையும் இந்த விஷயங்களை செய்தால் நமக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பொருட்களை வாங்க எந்த கிழமை ஏற்றது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. எந்த ஒரு காரியத்தையும் நாளை என தள்ளி வைத்தல் கூடாது. அதே நேரத்தில் நாம் சில முக்கியமான விஷயங்களைத் திட்டமிட்டு செய்வதுண்டு. திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகள் எப்படி சரியான நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து செய்கின்றோமோ, அதே போல் சில செயல்கள் திட்டமிட்டு அதற்குரிய நாட்களில் செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும் என்று சில ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். 

    ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிறு கிழமை என்பது சூரியனுக்குரிய நாள். இந்த நாளில் அரசாங்கம் தொடர்பான கடிதம் எழுதுதல், பெற்றோருக்கு தேவையான உதவிகளை செய்தல், ஆரோக்கிய மேம்பாட்டுக்கான மருத்துவம் செய்து கொள்ளுதல், ஆன்மிக செயல்பாடுகள் மேற்கொள்வதற்கு மிக சிறந்த நாள். இன்று குறிப்பாக இரும்பு சார்ந்த பொருள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது.

    திங்கட்கிழமை

    சந்திர பகவானுக்குரிய நாளான திங்கட்கிழமைகளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கலாம். ஆனால் இரும்பு போன்ற உலோகங்களை வாங்குவதற்கும் உகந்த நாள் அல்ல. எந்த ஒரு புதிய செயலை சிந்தித்து தொடங்குவதற்கு மிக உகந்த நாள். வெளியூர் பயணங்கள் செய்தல், பயணங்களால் அனுகூலமான பலன்களைப் பெறலாம். தாய்க்கு தேவையான உதவி செய்ய ஏற்ற நாள்.

    ​செவ்வாய்க்கிழமை

    அங்காரகன் எனும் செவ்வாய் பகவானுக்குரிய நாள். இந்த நாளில் புதிய வீடு கட்டுவதற்கான திட்டமிடலையும், பொருட்களை வாங்குவதற்கும், மனை பார்க்கவும் மிக உகந்த நாள். அதுமட்டுமல்லாமல் வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்குவதற்கும், கம்பி போன்ற இரும்பு பொருட்களை வாங்க ஏற்ற நாள். உடல் நலக்குறைவுக்கு மருந்து எடுத்துக் கொள்ள விரைவில் உடல் நலம் பெறலாம்.

    மேலும் படிக்க... புதன் பகவானுக்குரிய சிறப்புகளும் வழிபடும் முறைகளும்!

    செவ்வாய்


    ​புதன் கிழமை 

    பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பார்கள். அப்படி மிக விசேஷமாக பார்க்கப்படும் புதன் கிழமையில் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் அற்புத நாள். கல்விக்குரியவர் புதன் பகவான் என்பதால், அறிவு சார்ந்த பொருட்கள் வாங்குதல், கல்வி நிலையத்தில் சேருதல், புத்தகங்களை வாங்குதல், புதிய படிப்பை தொடங்குதல் போன்றவற்றிற்கு உகந்த நாள்.

    வியாழக்கிழமை

    குரு அருள் நிறைந்திருக்கக் கூடிய நாள் வியாழக்கிழமை. கல்வி உட்பட பல கலைகளை கற்றுக் கொள்ள அற்புத நாள். இந்த நாளில் கலைகளை கற்றுக் கொள்ளத் தொடங்க குருவின் அருளால் சிறப்பாக கற்றுத் தேர முடியும். புதிதாக தியானப் பயிற்சி தொடங்க, ஜாதகம் பார்த்தல், ஆலய தரிசனம் செய்ய ஏற்ற நாள்.

    மேலும் படிக்க... வியாழக்கிழமையின் சிறப்புகள்!

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமை மங்களம் நிறைந்த நாள். செல்வ செழிப்பு நிறைந்த நாளான வெள்ளிக் கிழமையில்  மங்கள நிகழ்ச்சி நடத்துவதற்கும், கடன் வாங்குதல், வாகனம் வாங்குதல், விலை உயர்ந்த பொருட்களான நகை ஆபரணங்கள்  வாங்கவும் உகந்தது.  . இந்த நாளில் சுப செலவு செய்யலாம்.

    சனிக்கிழமை

    சனி பகவானுக்குரிய சனிக்கிழமைகளில் வழக்கு தொடர்பாக விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வழக்கு குறித்த மனு தாக்கல் செய்யலாம். மருத்துவமனை செல்வதற்கும், வேளாண்மை சார்ந்த செயல்களில் ஈடுபட சிறப்பான நாள்.

    ஒரு சில நாட்கள் சுபமுகூர்த்தம் இல்லாவிட்டாலும், நல்ல நாளாக இல்லாவிட்டாலும், விநாயகரை வணங்கி எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கினால் அதில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மேலும் படிக்க... சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் பித்ருதோஷம் நீங்குமாம்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி