• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள்...

Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள்...

தீபாவளி 2021

தீபாவளி 2021

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள்.

  • Share this:
அனைத்து மக்களாலும் சிறப்பாக  கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 18ம் தேதி நவம்பர் 4 வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 4ம் தேதி காலை 4.24 மணி வரை சதுர்த்தசி அதன் பின்னர் அமாவாசை தொடக்கம். நவம்பர் 5ம் தேதி நள்ளிரவு 3.51 மணி வரை அமாவாசை நீடிக்கிறது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள்.

அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நவம்பர் 4ம் தேதி தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்ற விரத தினங்களைப் போல தீபாவளி நன்னாளிலும் விரதமிரம் இருந்து பகவான் கிருஷ்ணரை நினைத்தும், மகாலட்சுமி, குபேரரை வணங்கி பூஜை செய்தால் நல்லது. அதுமட்டும்மல்லாமல் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.



தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் எனப்படும் எண்ணெய் தேய்து குளியல் செய்வது முக்கியம் ஆகும். தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மேலும் படிக்க... விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

மேலும் தீபாவளி பண்டிகையின் போது ஏழை, எளியோருக்கு, ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காதவர்களுக்கு முடிந்த வரை புத்தாடை தானமும், இனிப்பு மற்றும் உணவு தானமும் செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்..

மேலும் படிக்க... இந்த வார ராசிபலன் | அதிர்ஷ்டமான ராசியினர் யார்? (அக்டோபர் 24-31 வரை)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: