முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் இந்த பிரச்சனைகள் வருமாம்! ஜோதிடம் சொல்லும் தகவல்!

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் இந்த பிரச்சனைகள் வருமாம்! ஜோதிடம் சொல்லும் தகவல்!

சந்திரன்

சந்திரன்

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஒன்பது கிரகங்களில் சந்திரனுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. ஒருவரின் ராசியை கண்டறிய, ஜாதகத்தில் சந்திரனின் நிலையை கண்டறிவது முக்கியம். ஒருவர் பிறக்கும் போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே அவர்களின் பூர்வீக சந்திரன் ஆகும். லக்னத்தைப் போலவே ராசியின் பலனும் பார்க்க வேண்டும். ஜோதிடம் மற்றும் ஜாதகத்தில் சந்திரனின் முக்கியத்துவத்தை பற்றி இங்கே நாம் காணலாம்.

அதீத வேகநிலை கொண்ட சந்திரன்

நவகிரகங்களில், மற்ற கிரகங்களை விட சந்திரன் வேகமானது. சந்திரன் ஒரு ராசியில் குறுகிய காலத்திற்கு மட்டுமே சஞ்சரிப்பார். அதாவது ஒவ்வொரு இரண்டரை நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுவார். இரண்டரை நாட்களுக்கு பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சென்றுவிடுவார். சந்திரனுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

சந்திரனின் முக்கியத்துவம் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் ஜாதகத்தை கணக்கிடுவதற்கு அவரது சந்திர ராசி முக்கியமானது. சந்திரன் நல்ல பலன்களை கொடுக்கும் கிரகம். ஜோதிடத்தில் சூரியன் தந்தையாகவும், சந்திரன் பெண் கிரகமாகவும் கருதப்படுகிறது. கடக ராசியின் அதிபதி சந்திரன். ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் சந்திரனின் நட்சத்திரங்கள். இது அன்பு, தாய், ஒழுக்கம், இடது கண் மற்றும் மார்பு பகுதியாக கருதப்படுகிறது.

சந்திரன் நீர் உறுப்புகளின் கடவுள். ஜோதிடத்தில், சந்திரன் அத்ரி முனிவருக்கும் அன்னை அனுசுயாவிற்கும் பிறந்த குழந்தை என கூறப்படுகிறது. சந்திரன்கள் பதினாறு புள்ளிகளை உடையது. மேலும், வடமேற்கு திசையின் தெய்வமாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்

ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோகம் உண்டாகும். ஜாதகத்தின் லக்ன வீட்டில் சந்திரன் இருந்தால், அந்த நபர் பார்ப்பதற்கு அழகாகவும், வசீகரமாகவும், கற்பனை திறன் மிக்கராகவும், உணர்திறன் உடையவராகவும் இருப்பார். பெரும்பாலும் இவர்கள் கலை சார்ந்த துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள். ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால், அந்த நபரின் மனநிலையும் வலுவாகஇருக்கும். மேலும், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

பலவீனமான சந்திரன் அறிகுறிகள்

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அந்த நபரின் மனநிலை பலவீனமாக இருக்கும். அவருக்கு மறதி ஏற்படும். சந்திரன் பலவீனமாக இருக்கும் போது ஜாதகன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்கட்டான சமயங்களில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். நபர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்களால் தனது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சந்திரன் பலவீனம் ஆனால் விபத்து அல்லது கடுமையான நோய் கூட ஏற்படலாம்.

சந்திரனை வலுப்படுத்த இதை செய்யுங்கள்:

* சந்திரனுக்கு உகந்த நிறம் வெள்ளை. ராசி படிகம் வெள்ளை முத்து. ஜாதகத்தில் சந்திரனை வலுப்படுத்த, வெள்ளி மோதிரத்தில் பதிக்கப்பட்ட முத்துவை சுண்டு விரலில் அணியுங்கள்.

* திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சந்திரனின் நிலையை மேம்படுத்தலாம். சந்திரனின் அதிபதி சிவன். எனவே, திங்கட்கிழமை அன்று மகாதேவரை வழிபடுங்கள்.

* சந்திர மந்திரங்களை தவறாமல் உச்சரிக்கவும். ஸ்லோகம் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.

ததேவ லக்னம் ஸுதினம் ததேவ;

தாரா பலம் சந்திர பலம் ததேவ

வித்யா பலம் தைவ பலம் ததேவ

லக்ஷ்மீபதே: அங்கிரியுகம் ஸ்மராமி

* வெள்ளை உணவு பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்யுங்கள். உதாரணமாக - அரிசி, பால், தயிர், சர்க்கரை போன்றவை. தேவைப்பட்டால், வெள்ளை நிற போர்வையையும் தானமாக வழங்கலாம்.

* பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று விரதம் இருக்கவும். சந்திர பகவானை வணங்கி அவருக்கு நீர் அபிஷேகம் செய்யுங்கள்.

* வெள்ளி கலசத்தில் இருந்து பால் கலந்த நீரைக் கொண்டு சந்திரனுக்கு அர்க்கியம் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்வதால், சந்திரனின் நிலை மேம்படும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சந்தோசம் உண்டாகும்.

First published:

Tags: Astrology, Moon