• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இப்படிப்பட்ட சுழி உங்கள் தலையில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இப்படிப்பட்ட சுழி உங்கள் தலையில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தலையில் ஒருவருக்கு சுழிகள் வலது இடது என்று ஆங்காங்கே இருந்தால் சிறிது காலம் துன்பமும், சிறிது காலம் செல்வாக்கும் என மாறி மாறி வந்து கொண்டிருக்கும். வாழ்க்கை எப்போதும் ஏற்றத் தாழ்வாக தான் சென்று கொண்டிருக்கும் நிரந்தரமான நிலை என்று இருக்காது.

  • Share this:
    குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள் இருந்தால் சுட்டித்தனமும், விளையாட்டும் அவர்கள் இடத்தில் அதிகம் இருக்கும். தலையில் 2 சுழி இருப்பதனால் உனக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்றும் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை தான் என்றும் கிண்டல் செய்வதை பார்த்துள்ளோம். அவ்வாறு தலையில் சுழி இருப்பதை குறித்தும் அதனால்  உண்டாகின்ற ஆன்மீக பலன்களை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

    எப்படி ரேகையைப் பொருத்து மனித வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்கிறோமோ, அதுபோல தலையில் உள்ள சுழியை வைத்தும் சில தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். சாமுத்ரிகா லட்சணத்தில் இருக்கும் சில குறிப்புகள் மூலமும், ஜோதிடத்தின் குறிப்புகள் மூலமும் மனித வாழ்க்கையின் ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும்.

    ஒருவரின் தலையில் வடப்பக்கம் சுழி இருந்து அவர் சந்திக்கும் நபரின் தலையில் இடது பக்கம் சுழி இருந்தால் இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கும். அவ்வாறு கணவன் மனைவி இருவருக்கும் இதுபோன்ற வலது, இடது என சுழிகள் இருந்தால் அவர்களுக்கிடையேயான அன்பும், நெருக்கமும் மிக அதிகமாக இருக்கும்.

    ஆனால் இதற்கு எதிர்மாறாக இருவருக்கும் வட பக்கமும் அல்லது இருவருக்கும் இடது பக்கமும் ஒரே மாதிரி சுழி இருந்தால் இவர்களின் உறவு எதிர்மாறாக தான் இருக்கும். உங்கள் தலையில் வலது புறம் ஒற்றை சுழி இருந்தால் நீங்கள் மிகவும் அன்பானவராகவும், அதிக  நட்பு வட்டாரம் கொண்டவராகவும் இருப்பீர்கள். சொந்த பந்தம் அனைவரும் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் அதனை தெளிவாக சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பீர்கள்

    இவ்வாறு ஒற்றை சுழிக்கு பதிலாக இரட்டைசுழி இருந்தால் அதுவும் வலதுபுறம் சுழன்று இருந்தால் நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். பேரும், புகழும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்கள் தலையில் இடது பக்கம் ஒற்றை சுழியாக இருந்து அதுவும் வலது பக்கம் சுழன்று இருந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் போராட்டமாகத்தான் இருக்கும்.

    மேலும் படிக்க... சூரசம்ஹாரத்தின் புராணக்கதை தெரியுமா உங்களுக்கு?

    எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதற்காக பெரிய அளவில் போராடித்தான் அதனை நீங்கள் பெற முடியும். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் மிகவும் போராட்டமாகத்தான் அமைந்திருக்கும். தலையில் ஒருவருக்கு சுழிகள் வலது இடது என்று ஆங்காங்கே இருந்தால் சிறிது காலம் துன்பமும், சிறிது காலம் செல்வாக்கும் என மாறி மாறி வந்து கொண்டிருக்கும். வாழ்க்கை எப்போதும் ஏற்றத் தாழ்வாக தான் சென்று கொண்டிருக்கும் நிரந்தரமான நிலை என்று இருக்காது.

    மேலும் படிக்க... சூரசம்ஹாரத்தின் புராணக்கதை தெரியுமா உங்களுக்கு?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: