Home /News /spiritual /

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ நாம் பூஜை அறையில் எந்த மாதிரியான சுவாமி படங்களை வைக்கலாம்?

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ நாம் பூஜை அறையில் எந்த மாதிரியான சுவாமி படங்களை வைக்கலாம்?

பூஜை அறை

பூஜை அறை

சுவாமி படங்களில் இருக்கும் தெய்வங்களில் சில தனியாக இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். சிவனும், பார்வதியும் தனித்தனியாக இருக்குமாறு படங்களை வைத்திருக்கக் கூடாது.

    கணவன் மனைவி ஒற்றுமை நிலவ நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறை சுத்தம் இல்லாத வீட்டில் தம்பதியர் இடையே நிச்சயம் ஒற்றுமை இருக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே வாரம் ஒரு முறை ஆவது பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்வது நல்லது. சுத்தமாக இருந்தால்தான் தெய்வ கடாட்சம் இருக்கும். அப்போதுதான் குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும்.

    அதே போல தம்பதியர் ஒற்றுமைக்கு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை மிக நெருக்க நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடைவெளி விட்டு வைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்தினுடைய கண்ணாடி எக்காரணம் கொண்டும் உடைந்து அல்லது கிழிந்தோ இருக்ககூடாது. அப்படி  இருக்கும் சுவாமி படங்களை வைத்து இருந்தால் கணவன் மனைவி இடயே சண்டைகள் வரும். ஒற்றுமை இருக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது. 

    மேலும் சுவாமி படங்களில் இருக்கும் தெய்வங்களில் சில தனியாக இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். சிவனும், பார்வதியும் தனித்தனியாக இருக்குமாறு படங்களை வைத்திருக்கக் கூடாது. இதுபோல தனி தனியாக சுவாமி படங்களை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் கட்டாயம் அங்கு தம்பதியர் ஒற்றுமையை குறைவாக இருக்கும். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

    எந்தந்த சாமி படங்களை வைக்கலாம் ?

    சிவபார்வதி இணைந்து இருக்கும் படத்தையும் அல்லது அர்த்தநாரீஸ்வரர் படத்தையும் வைத்துக் கொண்டால் தம்பதி ஒற்றுமை மேலோங்கி காணப்படும். பூஜை அறையில் மங்கள தெய்வங்களான முழுமுதற்கடவுளான விநாயக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடிய பகவான் நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பால திரிபுரசுந்தரி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலட்சுமி ஆகிய அம்பிகை படங்களும், குரு சாய்ராம், ராகவேந்திரர், யோகி ராம் சுரத்குமார் அல்லது நீங்கள் வணங்குகிற குரு இருக்க வேண்டும்.

    அதுபோலவே பத்மாவதி தாயார் உடன் இருக்கும் பெருமாள் படத்தை வைத்திருந்தால் குடும்பத்தில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் வராது. அப்படியே வந்தாலும் சனிக்கிழமைகளில் ஒரு நெய் தீபம் ஏற்றி பாருங்கள், வந்த சண்டைகள் நொடியில் தீரும்.

    முக்கியமாக வைத்திருக்க வேண்டிய படங்கள்

    அதற்கு அடுத்தாற்போல், கல்வி ஞானத்துக்கு அதிபதியான சரஸ்வதி மிகமிக முக்கியமாக இருக்க வேண்டும். குலம் காக்கும் குல தெய்வம் படம் அது உக்கிரமாக இருந்தாலும் நிச்சயமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களை வைத்து வணங்கக்கூடாது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால், வீட்டிலேயே நவக்கிரகங்களை சிறிய அளவில் பாடமாக வைத்து வணங்கலாம். நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களை போக்க சனிக்கிழமைகளில் இதற்கு விளக்கேற்றி பூஜை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    மேலும் படிக்க...  ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியுமா?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: God, Husband Wife

    அடுத்த செய்தி