ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இந்த மூன்று ராசியினர் இப்படித் தான் இருப்பார்கள்... காரணம் இதுதான்...

இந்த மூன்று ராசியினர் இப்படித் தான் இருப்பார்கள்... காரணம் இதுதான்...

ராசி பலன்

ராசி பலன்

Rasi Palan Earth Sign | புதன் உச்சமாகும் கன்னி ராசியினர் அறிவை வளர்க்க விரும்புவார்கள்...

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில பிரிவுகளின் அடிப்படையில் குணநலன்கள் ஒன்றுபடும். ஆகாயம் தவிர்த்து, நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்று என்ற பஞ்ச பூத ஆற்றலின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட பண்புகளின் அடிப்படையில் நான்கு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், ரிஷப ராசி, கன்னி ராசி மற்றும் மகர ராசி ஆகிய மூன்று ராசிகளும் சில பண்புகளின் அடிப்படையில் நில ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இந்த ராசியினரின் குணங்கள் வேறுபட்டாலும், பொதுவான பல விஷயங்களில் ஒத்துப் போகும்.

நில ராசியினர் எப்படி இருப்பார்கள் – பொதுவான குணநலன்கள்

நெருப்பு ராசியினர் அதீத கோபம், தீவிரமான தன்மை, வேகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அதே போல, நிலம் என்று வரும் போது, அமைதியானவர்கள், பணிவானவர்கள் மற்றும் பொறுமையானவர்கள்.

பொதுவாக நில ராசியைச் சேர்ந்தவர்களை சோம்பேறி அல்லது சுறுசுறுப்பே இல்லாதவர்கள் என்று கூறுவதுண்டு. ஆனால், அது உண்மை அல்ல. பொறுமையாக இருந்து, நன்றாக ஆராய்ந்து பார்த்து, அடித்தளத்தை பலமாக்கி தான் எந்தவொரு விஷயத்தையும் செய்வார்கள். எனவே, நிதானமும், நீண்ட காலத் திட்டமும் கொண்ட ராசியினர் ரிஷபம், கன்னி மற்றும் மகரம்.

இது மட்டுமின்றி, பூமியில் சொகுசாக வாழத் தேவையான அனைத்து விஷயங்களும் இவர்களுக்குப் பிடிக்கும். இவர்களுக்கு ஆடம்பரம் பிடிக்கும் என்றாலும், முறையாகத் திட்டமிட்டு, பணம் சேமிப்பதிலும் வல்லவர்கள்.

காதல், உறவு, நட்பு என்று வரும்போது, இந்த ராசியினர் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள். நில ராசியினர் மற்ற நில ராசியோடு நன்றாகப் பொருந்துவார்கள். அதே போல, தண்ணீர் ராசியுடனும் பொருத்தம் நன்றாக இருக்கும்.

ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசியின் அடிப்படை குணநலன்கள்:

* பணிவானவர்கள்

* உணர்ச்சிபூர்வமானவர்கள்

* பொறுமையானவர்கள்

* எதையும் முறையாக செய்ய விரும்புபவர்கள்

* உண்மையானவர்கள்

* விசுவாசம் மற்றும் நேர்மையானவர்கள்

* நடைமுறையில் செயல்படுபவர்கள்

* கடின உழைப்பாளிகள்

சுக்ரன் ஆளும் ரிஷப ராசி அழகுணர்ச்சி மிகுந்தவர்கள். சொகுசாக வாழ விரும்புவர்கள். அதே போல, கடின உழைப்பாளி.

புதன் உச்சமாகும் கன்னி ராசியினர் அறிவை வளர்க்க விரும்புவார்கள். பேச்சு சாதுர்யம் அதிகம்.

சனியின் ஆட்சி வீடான மகர ராசியினர், மிகவும் அமைதியானவர்கள் மற்றும் பொறுமை காப்பார்கள். அதே நேரத்தில் கூர்மையான புத்தி, கவனிக்கும் திறன் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

மேலும் படிக்க... சுபகிருது தமிழ் புத்தாண்டு 2022...12 ராசியினருக்கும் எப்படி இருக்கும்?

நில ராசியினர் எப்படி தங்கள் அன்றாட வாழ்வில் எப்படி பேலன்ஸ் செய்வது:

நீங்கள் மாற்றத்தை விரும்ப மாட்டீர்கள். எனவே, உங்களுடைய அன்றாட வாழ்வில் என்னவெல்லாம் செய்கிறீர்களோ, காலை எழுந்து கொள்வது முதல் இரவு தூங்கச் செல்வது வரை, முடிந்த வரை திட்டமிட்டு பின்பற்றினால், உங்களுக்கு எல்லா வேலைகளையும் சுலபமாக செய்ய முடியும்.

அதே நேரத்தில், ‘பிளான் பண்ணி தான் பண்ணனும்’ என்று எல்லாவற்றுக்கும் திட்டமிட்டு செய்வது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது. எனவே, சில விஷயங்களுக்கு இன்ஸ்டன்ட் முடிவு, உடனடி செயல்பாடு ஆகியவைத் தேவை. ஒரு பக்கம் நிதானமாக இருந்தாலும், மற்றொரு புறம் சட்டென்று செயல்படுவது, அழகான பேலன்ஸ் ஏற்படுத்தும்.

கெட்ட பழக்கத்தில் மாட்டிக் கொண்டால், அதிலிருந்து வெளிவருவது கடினம். எனவே, உங்களுடைய பலவீனம் என்னவென்பதை நன்றாக அறிந்த பின்பு, அதில் இருந்து வெளிவர அல்லது தவிர்க்க முடிவு செய்யுங்கள். எல்லா வேலைகளையும் தள்ளிப்போடுவது உங்களின் பலவீனங்களில் ஒன்று.

First published:

Tags: Rasi Palan