செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன் தெரியுமா?
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன் தெரியுமா?
நகம்
செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று நம் முன்னோர்கள் கூருவார்கள்.
வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த இரண்டு நாட்களும் அம்மனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதனால்தான் எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அது வெற்றியாக அமைய வேண்டும் என இந்த இரண்டு நாட்களில் பலரும் தங்கள் பணிகளை செய்ய தொடங்கி விடுவர். அதுபோல இந்த இரண்டு நாட்களில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது, நகத்தை வெட்ட கூடாது, முடி வெட்ட கூடாது என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் நாம் புதிதாக ஒரு பொருளை அடைய வேண்டும் அல்லது பெற வேண்டும். அதை தவிர்த்து நாம் நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை இழக்க கூடாது என்று சொல்லப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டே வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வதுண்டு. முடி, நகம் இரண்டுமே வெட்ட வெட்ட வளர்வது தானே? அதில் இழக்க என்ன இருக்கிறது ?என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுவும் நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நம்பிக்கையின் அடிப்படையில் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு வருகிறது.
அதேபோல செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது என்று சொல்வார்கள். இந்த 2 கிழமைகளும் துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.