முஸ்லிம்கள் ரமலான் நோன்பிருப்பது ஏன்?

உடல், மனம், ஆன்மா என அனைத்துக்கும் பயிற்சியளித்து இனிவரும் காலங்களில் அறம் சார்ந்து வாழும் மனிதனாக, இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்பவனாக ஆகவேண்டும் என்பதே நோன்பில் நோக்கம்.

முஸ்லிம்கள் ரமலான் நோன்பிருப்பது ஏன்?
உடல், மனம், ஆன்மா என அனைத்துக்கும் பயிற்சியளித்து இனிவரும் காலங்களில் அறம் சார்ந்து வாழும் மனிதனாக, இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்பவனாக ஆகவேண்டும் என்பதே நோன்பில் நோக்கம்.
  • Share this:
ஆண்டுதோறும் ஒரு மாதத்துக்கு முஸ்லிம்கள் நோன்பிருந்து, பிறகு ரம்ஜான் எனும் ஈகைப் பெருநாள் கொண்டாடுவது வழக்கம். அதுபோலவே இந்த ஆண்டும் உலககெங்கும் வாழும் முஸ்லிம்கள் எதிர்வரும் 30 நாட்களுக்கு நோன்பு நோற்கவுள்ளார்கள்.

ஏன் நோன்பிருக்கிறார்கள், எப்படி அது கடைபிடிக்கப்படுகிறது போன்றவை எல்லா வருடமும் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்கப்படும் கேள்விகளாகும். தற்சமயம் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் அதற்கான வாய்ப்புகள் முஸ்லிமல்லாதவர்களுக்கு குறைவுதான்!

இஸ்லாமிய நாள்காட்டியின்படி 9வது மாதமான ரமலானில் இஸ்லாமியர்கள் அனைவரும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறையும் வரை நோன்பிருப்பார்கள். இது இஸ்லாமின் 5 கடமைகளுள் ஒன்று. இறைத்தூதர் முஹம்மது மூலம் மனிதர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் இறைவன் அருளியது திருக்குர்ஆன் என முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஒரு நூலாக இல்லாமல் 23 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும். அதன் முதல் வசனம் அருளப்பட்ட மாதமே ரமலான். இதன் காரணமாகவே இம்மாதம் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் அனைவரும் இதைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கோருகிறது.


திருக்குர்ஆனின் ஒரு வசனம் இப்படிச் சொல்கிறது: நோன்பு நோற்பது குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் அந்நாட்களில் உங்களுள் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது பரிகாரம் கடமையாகின்றது. அது ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். எவரேனும் விரும்பி அதிக நன்மைகள் செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும். (திருக்குர்ஆன்: 2வது அத்தியாயம், 184வது வசனம்)

இந்த ரமலான் மாதத்தில் உணவைத் தவிர்த்திருப்பது நோன்பின் அடிப்படை என்றாலும் அதுதவிர தவறான நடத்தைகள், பொய், பொறாமை உட்பட அனைத்து தீய குணங்களையும் விட்டு விலகியிருக்க வேண்டும். இல்லையென்றால், நோன்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், இறைவனுக்காக இரவுத் தொழுகையில் ஈடுபடுவது, குர்ஆன் ஓதுவது முதலானவற்றின் வழியாக ஆன்ம பலம் பெற வேண்டும். ஆண்டுதோறும் தனது சொத்தில் 2.5% தொகையைக் கணக்கிட்டு இம்மாதத்தில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமின் இன்னொரு கட்டாயக் கடமையான இதை ’ஸகாத்’ எனச் சொல்வார்கள்.

இப்படியாக இந்த மாதம் முழுக்க உடல், மனம், ஆன்மா என அனைத்துக்கும் பயிற்சியளித்து இனிவரும் காலங்களில் அறம் சார்ந்து வாழும் மனிதனாக, இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்பவனாக ஆகவேண்டும் என்பதே நோன்பில் நோக்கமாகும்.அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்.









 

Also see:
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading