முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இடது கண் துடித்தால் கேட்ட விஷயம் நடக்க போகுதா? - ஜோதிடம் கூறுவது என்ன?

இடது கண் துடித்தால் கேட்ட விஷயம் நடக்க போகுதா? - ஜோதிடம் கூறுவது என்ன?

கண் இமை துடித்தால் நல்ல விஷயம் நடக்குமா?

கண் இமை துடித்தால் நல்ல விஷயம் நடக்குமா?

நம்மில் பலருக்கு திடீரென கண் துடிப்பதை உணர்ந்திருப்போம். ஆனால், அதற்க்கு என்ன அர்த்தம் என பலருக்கும் தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், இதோ உங்களுக்கான பத்திகள் இங்கே:

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சில சமயங்களில் நமது கண்கள் துடிப்பதை நாம் உணர்ந்திருப்போம். ஜோதிடம் ரீதியாக கண்கள் துடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இது அடிக்கடி நிகழ்வதில்லை, எப்போதாவது வருவதுடன், தானாக சரியாகிவிடும். கண் துடிப்பதற்கு என்னதான் அறிவியல் காரணங்கள் இருந்தாலும், மக்கள் பெருவாரியாக நம்புவது என்னவோ ஜோதிட காரணத்தை தான். ஜோதிடம் ரீதியிலான காரணங்களை இங்கே காணலாம்.

கண்ணிமை துடிப்பதன் கலாச்சார நம்பிக்கை:

காலம் காலமாக கண்ணிமை துடிப்பதற்கு பல நம்பிக்கை உள்ளது. பெரியவர்களின் கூற்று அல்லது கலாச்சார நம்பிக்கையின்படி, மேல் கண்ணிமை துடித்தால் நெருங்கிய உறவினர் ஒரு இறந்து விட்டார் என கூறப்படுகிறது.

அதுவே, உங்களின் வலது கண் துடித்தால் நீங்கள் வெற்றி, பாராட்டு மற்றும் நல்ல செய்தியை பெறப்போகிறீர்கள் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, நீங்கள் ஒரு புதிய நபரை சந்திக்கபோகிறீர்கள் எனவும் கூறப்படுகிறது.

சீன ஜோதிடம் கூறுவது என்ன?

மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரங்களில் ஒன்று சீன கலாச்சாரம். சீன ஜோதிடத்தின்படி, ஆண்களின் இடது கண் துடித்தால் மிகவும் அதிர்ஷ்டத்தை தரும் எனவும், வலது கண் துடிப்பதால் துரதிர்ஷ்டம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. அதுவே, பெண்களுக்கு இடது கண் துடித்தால் பிரச்னைகளும், வலது கண் துடித்தால் நன்மையும் உண்டாகும் என கூறப்படுகிறது. ஆனால், இந்திய ஜோதிட நம்பிக்கை இதற்கு எதிர்மறையானது.

Also Read | உங்க கனவில் பாம்பு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ஆண்கள் கண்ணிமை துடிப்பதன் பலன்:

ஆண்களின் வலது கண்ணிமை துடித்தால் அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. வியாபாரம், தொழில், வேலை போன்ற விஷயங்கள் குறித்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

இதுவே, ஆண்களின் இடது கண்ணிமை துடித்தால் அது அசுப அறிகுறியாக கருதப்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் கடினமான நேரத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை குறிக்கிறது. எனவே, இந்த சமயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பெண் கண்ணிமை துடிப்பதன் பலன்:

பெண்களின் வலது கண் துடித்தால் (Right Eye Blinking For Female), அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இந்த சமயங்களில் மோசமான விஷயங்களை சந்திப்பீர்கள். எனவே, கவனமாக இருப்பது நல்லது.

Also Read | மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

அதுவே, பெண்களின் இடது கண் துடித்தால் அது சுப அறிகுறியாக கருதப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மற்றும் வாழ்க்கை குறித்த நல்ல செய்திகள் வரும்.

கண்ணிமை துடிப்பதற்கான அறிவியல் மற்றும் மருத்துவ காரணம் என்ன?

கண்ணிமை துடிப்பது, கண்ணிமை இழுப்பது, வலிப்பு, பார்கின்சன் நோய் மற்றும் மன அழுத்தம் போன்றவை நரம்பியல் கோளாறுகளாகப் பார்க்கப்படுகிறது. நமது உடலில் மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்கள் குறைபாட்டாலும், சத்துக்கள் குறைபாடு காரணமாகவும் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

First published:

Tags: Astrology, Eye care, Eye Twitching, Zodiac signs