• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சூலம் என்றால் என்ன என்ன? அறிவியல் பூர்வமான காரணங்கள் குறித்த தகவல்கள்...

சூலம் என்றால் என்ன என்ன? அறிவியல் பூர்வமான காரணங்கள் குறித்த தகவல்கள்...

கிழக்கே சூலம்

கிழக்கே சூலம்

குறிப்பிட்ட நாளில் பயணம் செய்யாதீர்கள், கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றெல்லாம் சொல்கிறார்களே! இந்த திசையில் பயணம் செய்ய எந்த நாட்கள் ஏற்றது என்று சொல்லப்பட்டிருக்கிறதா என்றால்... இருக்கிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது... வாங்க

  • Share this:
    சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் இவ்வாறாக ஒவ்வொரு நாளிற்கும் குறிப்பிடுவர்.

    சூலம் என்றால் என்ன என்ன? ...

    சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூரியுள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்கள் ஏழினையும் வார நாட்களாக ஞாயிறு, திங்களையும் பெயரிட்டு அழைக்கிறோம். ஒவ்வொரு கோளிற்கும் உரிய திசைக்கு எதிர்திசையை அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசையெனக் குறிப்பிட்டிருப்பர்.

    சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் இவ்வாறாக ஒவ்வொரு நாளிற்கும் குறிப்பிடுவர். இதற்குப் பரிகாரமாக அன்றைய தினம் பகல்12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் என்றும் ஒரு சிலர் அறிவுறுத்துவர்.  மேலும் அலுவல் பணியாகவோ, தொழில்முறையிலோ அடிக்கடி பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    அதாவது, கர்ப்பிணி பெண்கள் பிரயாணம் செய்யும்போது அவசியம் சூலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள குழந்தைக்கும், அந்தக் குழந்தையை சுமக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

    அதே போல, கிரஹப்ரவேசம் என்று சொல்லப்படுகின்ற புதுமனை புகுவிழாவிற்கும் வாரசூலை அவசியம் பார்க்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதற்கு புதிய வீட்டின் தலைவாசக்கால் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உதாரணத்திற்கு கிழக்கு பார்த்த வாசல் என்றால் ஞாயிறு, மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதுமனை புகுவிழா நடத்தக்கூடாது. கிழக்கு நோக்கிய வாசற்படிக்கு பூஜை செய்து வீட்டினுடைய எஜமானர் மேற்கு நோக்கி உள்ளே நுழைய வேண்டியிருக்கும். ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கே சூலம் என்பதால் அந்த நாட்களில் கிரஹப்ரவேசம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். அதே போல க்ஷேத்திராடனம் அதாவது, ஆன்மிகப் பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டியது அவசியம்.

    திங்கள், சனிக்கிழமை கிழக்கே சூலம், ஞாயிறு, வெள்ளி மேற்கே சூலம், செவ்வாய், புதன் வடக்கே சூலம், வியாழன் தெற்கே சூலம். இந்த நாட்களில் இந்த திசைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பர். அத்தியாவசியமாக இந்த திசைகளில்
    பயணம் செய்ய வேண்டும் என்றால், கிழக்கு திசைக்கு தயிர், மேற்கிற்கு வெல்லம், வடக்கிற்கு பசும்பால், தெற்கிற்கு நல்லெண்ணெய் சேர்த்த ஏதேனும் ஒரு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற விதி விலக்கும் இருக்கிறது.

    அதே போல செவ்வாயன்று கிழக்கே பயணம் செய்தால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள் கிடைத்து விடும். புதன், வியாழனில் மேற்கே பயணம் செய்தால் நீங்கள் நினைத்துப் போகும் செயலில் வெற்றி கிடைக்கும். ஞாயிறு, வெள்ளியில் வடக்கே பயணம் செய்தால் தானிய லாபம் கிடைக்கும். திங்கள், சனியில் தெற்கே பயணம் செய்தால் பணவரவு உண்டு.

    மேலும் படிக்க... மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்,சம நோக்கு நாட்கள் என்றால் என்ன?

    மரகத லிங்கத்தின் சிறப்புகளும் அதனை வழிபாடுவதால் கிடைக்கும் பலன்களும்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: