குழந்தைபேறு என்பது பாக்கியம். இது கிடைக்கப்பெறாதவர்கள் புத்திர சோகம், புத்திர தோஷம், புத்திர பாக்கியம் என மூன்றாக வகைப்படுத்தலாம். புத்திர தோஷம் என்பது குழந்தை பிறப்பிற்கு முன் அல்லது குழந்தை பிறப்பதில் உள்ள பிரச்சினையை குறிக்கும். புத்திர சோகம் என்பது குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், மனவேதனையே புத்திர சோகம்.
புத்திர பாக்கியம் என்பது திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியமே ஏற்படாத நிலை, ஆண்வாரிசு இல்லாமை, குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோஷம் இல்லாமை அல்லது பெற்றோர்களை பிரிந்து வாழ்வது. இளவயதில் குழந்தைகள் நோயினால் கஷ்டப்படுவது, ஊனமுற்றவர்களாக பிறப்பது, பெற்றோர்களை காப்பாற்றாமல் விடுவது,
சொத்துக்காகவும் வேறு சில விஷயங்களுக்காகவும் கொல்லப்படுவது. ஆசையோடு வளர்த்துவரும் பிள்ளைகள் நோயின் காரணமாகவும், விபத்தின் காரணமாகவும், நடுவயதில் அகாலமாக உயிர் துறப்பது, என்று ஒன்பது வகையான புத்திர தோஷங்கள் உண்டு. இவற்றில் சில தோஷங்கள், சில காலம் வரை நீடிக்கும். பல தோஷங்கள், பல வருஷங்களுக்கு நீடிக்கும். மேலும் சில தொடர்ந்து கடைசிவரை வந்து கொண்டே இருக்கும்.
புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.
“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை..
Also see... குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி!
பரிகரங்கள்
புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
மேலும் ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, மருத்துவ உதவி செய்தல், பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்ற செயல்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhosham | தோஷம்