Pitru Dosham | ஒவ்வொரு வருடமும் பித்ரு பக்ஷத்தின் போது முன்னோர்களை வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் ஏற்படலாம். நிதி நிலைமை மோசமடைவதால், வீட்டில் பிரச்சனைகளும் அதிகரிக்கத் தொடங்கும். குழந்தையின்மையால பலவிதமான மன கஷ்டங்கள் ஏற்படும் என்கிறது சாஸ்திரங்கள்.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என்கிறது சாஸ்திரம்...
பித்ரு தோஷம் என்றால் என்ன?
பெற்றோரை பிள்ளைகள் இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களை செய்வது, பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் என ஆசையினாலும் பேராசையினாலும் பிறருக்கு தீங்கிழைப்பது, குழந்தை பிறந்தவுடன் இறந்து போவது உற்றார் உறவினரோடு விரோதங்கள் உண்டாவது, குடும்பத்தில் நிம்மதியின்மை நிலவுவது புத்திரன் பகைவனைப் போல செயல்படுவது மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவது போன்ற இந்த மன கஷ்டங்கள் தொடர்ந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக கருட புராணம் கூறுகிறது.
பரிகாரங்கள்
இந்த பித்ரு தோஷத்தைப் போக்க காக்கைகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் உணவளிக்க வேண்டும். மாதம் மாதம் வரும் அமாவாசை நாளில் வெள்ளைப் பசுவிற்கு பசும்புல்லை உண்ணக் கொடுக்கவும். பித்ரு தோஷ நிவாரண பூஜையை ஒரு ஜோதிடரிடம் முறையாக தெரிந்துக் கொண்டு, தோஷத்தைப் போக்கலாம். பொதுவாக காசிக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது.
அதைத் தவிர பித்ரு தோஷத்திற்கான பரிகாரங்கள் சிலவற்றை புராணங்கள் சொல்லியிருக்கின்றன. அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுவது பித்ரு தோஷத்திற்கான முதல் நிவாரணம். அதேபோல் அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றி, அதை அணையாமல் எரிய விடுங்கள். மேலும் ஆதரவற்றவர்களுக்கு உதவினாலும் அன்னதானம் வழங்கினாலும் உங்கள் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.