• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நவபாஷாணம் என்றால் என்ன? பழனி முருகன் சிலையில் ஏன் நவபாஷாணம் வைக்கப்பட்டது தெரியுமா?

நவபாஷாணம் என்றால் என்ன? பழனி முருகன் சிலையில் ஏன் நவபாஷாணம் வைக்கப்பட்டது தெரியுமா?

பழனி முருகன் சிலை

பழனி முருகன் சிலை

எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு கொடிய நோய்க்காக சுமார் 2800 வருடத்திற்கு முன்னாள் போகர் சித்தர் மூலம் உருவாக்கப்பட்டதுதான் இந்த நவபாஷாணம்.

  • Share this:
    நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும்.பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம். இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடிய தன்மையுடையது. நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு....

    சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்... 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை பாஷாணம் 8.கௌரி பாஷாணம் 9.தொட்டி பாஷாணம்

    இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

    தமிழ் நாட்டில் 4 இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில். சிவகங்கையில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள நவபாஷாண பைரவர் மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

    மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
    நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்த நீரை பருகுவதால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

    எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு கொடிய நோய்க்காக சுமார் 2800 வருடத்திற்கு முன்னாள் போகர் சித்தர் மூலம் உருவாக்கப்பட்டது தான் இந்த நவபாஷாணம்.

    முதலில் நவபாஷாணம் முருகன் சிலை ஏன் பழனியில் வைக்கப்பட்டது தெரியுமா?

    2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட ராஜா ராஜா சோழன் பாண்டியர்களும் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது மற்றவர் கைக்கு இந்த மருந்து கிடைத்துவிடக்கூடாது எனவும் அல்லது அதன் பின்வந்த சுல்தான்கள் பிரிட்டிஷ் இவர்கள் இந்த மருந்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டு எடுத்து செல்ல நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.  பொதுவாக தமிழகத்தில் கடவுள்களுக்கு என்று ஒரு மரியாதையை உண்டு அதுவும் முருகன் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. முருகனை பிடிக்காதவர் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதனால்தான் அப்பேற்பட்ட முருகன் சிலையில் இந்த நவபாஷாண சிலை செய்வதால் யாருக்கும் இந்த மருந்தின் மீது தனியுரிமை ஏற்படாது. ஏனென்றால் முருகன் என்பவர் பொதுவானவர் இதனையெல்லாம் அறிந்தே போகர் சித்தர் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன...



    மேலும் படிக்க... முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்...

    இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் இந்த நவபாஷாண சிலை கல் கிடையாது மூலிகைகளை நன்கு அரைத்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது பொதுவாக பாறையால் செய்யப்பட்ட சிலைகூட சில சேதாரம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பொது 2500 வருடத்திற்கு முன் செய்யப்பட்ட இந்த முருகன் சிலை எப்படி கம்பிரமாக நிற்கிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும் .

    இந்த போகர் சித்தர் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பழனி மலையின் மேல் போகர் சித்தரோட சமாதி இருக்கு. ஆனால் அங்க போகர் சித்தரோட உடல் இல்ல அது ஒரு குகை அந்த குகையை யாரும் இன்று வரை சென்று பார்க்கவில்லை. அந்த குகைக்குள் தான் போகர் கடைசியாக தவம் செய்ய சென்றிருக்கிறார். அங்கு இன்றும் போகர் தவம் செய்துக்கொண்டிருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கைஇருந்து வருகிறது...

    இந்த நவபாஷாண முருகன் சிலை ஆரம்ப காலத்தில் பழனிமலையில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் விமர்சையாக கொண்டாப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நாட்கள் ஆகஆக அங்கு இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர். பின்னர் சில ஆண்டுகளுக்கு பின் வந்த சேரமன்னன் வேட்டையாடுவதற்காக மழைக்கு செல்லும் பொழுது அங்கு இருந்த முருகன் சிலையை கண்டறிந்து அதன் வரலாறை அப்போ அங்கு இருந்த மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த மலைமேல் கோவில் கட்டியிருக்கிறார். அந்த கோவில்தான் இப்ப இருக்கும் பழனி முருகன் கோவில் .



    இந்த கோவிலை யார்யார் வழிவழியாக பூஜை செய்துகொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?

    ஆரம்பத்தில் சொன்னது போல புலிப்பாணி என்ற சித்தரை போகர் 81 சித்தர்களுக்கும் தலைமை சித்தராக நியமித்தார் இல்லையா அவருடைய பரம்பரைதான் இந்த கோவிலுக்கு மக்கள் வந்தாலும் வராட்டியும் தொடர்ந்து பூஜை செய்து கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது இருந்த சேரமன்னன்னும் உங்கள் வழிபாட்டில் நாங்கள் எந்த விதத்திலும் குறுக்கிட மாட்டோம் எங்கள் மதத்தை உங்கள் மீது திணிக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால் இது 16 ஆம் நூற்றாண்டு வரை மட்டும் தான் நடைபெற்றது. அதன் பிறகு சமஸ்கிரதம் வந்ததால் மற்ற கோவிலைகளில் எவ்வாறு பூஜை வழிபாடுகள் நடக்கின்றனவோ அது போல் பழனியிலும் நடக்கவேண்டும் என சட்டம் கொண்டு வந்தார்கள்.

    மேலும் படிக்க...  வைகாசி விசாகம் 2021 : இந்த நாளின் சிறப்புகள் என்ன? முருகன் கடவுளை எப்படி வழிப்பட வேண்டும்?

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் 30 கோடிக்கும் அதிகமான காணிக்கைகள் வருகிறதாம் மேலும் என்னவென்றால் இப்ப இந்த கோவிலில் இருக்கும் முருகர் சிலை நவபாஷாண சிலை கிடையாது எனவும் அது போல் உருவாக்கப்பட்ட போலி எனவும் கூறுகிறார்கள் ஏனெனில் சன்ஸ்கிரிட் வந்த சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த நவபாஷாண முருகன் சிலைக்கு பால் தண்ணிர் போன்ற பல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதால் அந்த சிலைக்கு சில பாதிப்புகள் உண்டாகின்றன அதனால் அந்த நவபாஷாண சிலையை தனி ஒரு பாதுகாப்பான அறையில் வைத்து விட்டு போலி சிலையை மக்கள் முன் காட்டுகிறார்கள் என்ற ஒரு தகவலும் உள்ளது பெரிய விழாக்களின் போது மட்டும் உண்மையான சிலை வெளியே கொண்டுவரப்படுகிறதாம் .

    மேலும் படிக்க... இன்று சஷ்டி விரதம்...முருகனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

    மேலும் படிக்க... கிருத்திகை என்றால் என்ன? கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: