• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இஷ்டி காலம் என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்தால் சிறப்பு...

இஷ்டி காலம் என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்தால் சிறப்பு...

இஷ்டி காலம்

இஷ்டி காலம்

நாளை இஷ்டி காலம்.... நாள் காட்டியில் இஷ்டி காலம் என்பது என்ன, அந்த தினத்தின் பலன்கள் என்ன, நாம் இஷ்டி காலத்தில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள் என்ன என்பதை தெரிந்துக் கொளவோம் வாங்க...

  • Share this:
    தினமும் நாம் பார்க்கக் கூடிய நாட்காட்டியில் பல குறியீடுகள், பல குறிப்புகளை உணர்த்தக்கூடிய சொற்க்கள் இடம்பெற்றிருக்கும். அதாவது சஷ்டி விரதம், திருவோண விரதம், வாஸ்து நாள், கரி நாள், மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், என பல குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். அப்படி நாட்காட்டியில் இடம்பெறறிருப்பதை நாம் ‘இஷ்டி காலம்’ என குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இஷ்டி என்பது பெளர்ணமி அல்லது அமாவாசை திதியின் இறுதிப் பகுதியும், அடுத்து வரக்கூடிய பிரதமை திதியின் முதல் மூன்று பகுதியும் இணைந்தது தான் இஷ்டி காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இன்று அமாவாசை அல்லது பெளர்ணமி திதியாக இருப்பின், நாளை இஷ்டி காலமாக இருக்கும்.

    இஷ்டி காலத்தின் சிறப்புகள் :

    இந்த இஷ்டி காலத்தில் நாம் கடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூஜைக்குரிய தெய்வமோ அல்லது தேவர்களோ உங்கள் அருகில் வந்து சூட்சமமான ரூபத்தில் நின்று எழுந்தருளி உங்களின் வழிபாட்டையும், வணக்கத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஆன்மிக மற்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

    தேவர்கள் நேரில் வந்து ஆசி வழங்கக் கூடிய மிக உன்னதம் மிக்க நாள் என்பதால். இந்த நாளில் நாம் வீட்டு விசேஷம் அல்லது தொழிலுக்கான ஹோமங்கள் செய்தல், உலக நன்மைக்கான ஹோமங்கள், யாகங்கள் செய்வதற்கான அற்புதமான நாள். இந்த நாளில் நாம் ஹோமம், யாகங்கள் செய்வதால் அதன் சக்தி பல மடங்கு புண்ணியத்தையும், பலனையும் தரக்கூடியதாக இருக்கும். இந்த நாளில் நாம் செய்யக் கூடிய தான, தர்மங்கள், சாதாரண நாட்களை விட அதிக பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

    மேலும் படிக்க... Pournami: ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு... என்ன தெரியுமா?

    சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் என்னென்ன?

    மேலும் இந்த நாளில் செய்யப்படும் ஹோமங்கள் சக்தி வாய்ந்தவையாக அமையும். இஷ்டி நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், பன்மடங்கு புண்ணியப் பலன்களைத் தரும். 'இஷ்டி' என்றாலே பூஜை, யாகம் என்றுதான் அர்த்தம். 'ஓம் இஷ்டி பதயே நமோ நம' என்று குமாரஸ்தவத்தில் முருகப்பெருமானைப் பற்றி குறிப்பிடும்போது சொல்லப்பட்டுள்ளது. பூஜைகளை, யாகங்களை விரும்பி ஏற்பவன் முருகப்பெருமான் என்றே இதற்குப் பொருள். இஷ்டி காலத்தில் பூஜைகள், ஹோமங்கள் செய்வது, சகல தேவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் என்பதால், இன்றைய நாளில் உங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி வளம் பெறுங்கள்.

    மேலும் படிக்க... புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

    ஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லையாம்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: