பொதுவாக, சனி பகவான்- ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 3,6,11 ஆகிய இடங்களில் வரும் போதெல்லாம் நன்மைகளை வாரி வழங்குவார். அப்போது அவர் வள்ளல். ஏன்? குரு போன்ற சுபக் கிரகங்கள் கூட அந்த அளவுக்கு நன்மையை செய்ய முடியாது. அவ்வளவு நன்மையை சனி செய்வார். ஆனால், அதே சனி 12,1,2,4,5,7,8,9,10 ஆகிய இடங்களுக்கு வரும் போதெல்லாம் நம்மை பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துவார். அதிலும் 12,1,2 ஆகிய இடங்களில் வரும் போது அதனை ஏழரைச் சனி என்று சொல்வோம். அந்தக் காலத்தில் தான் அதிகம் பேருக்கு திருமணம் நடக்கும்.
உண்மைதான். அதாவது அதிக பொறுப்பை தலை மீது ஏற்றி வேடிக்கை பார்ப்பார் சனி. சிலந்தி வலையில் சிற்றெறும்பு சிக்கிய கதையாக ஏழரை வருடம் இருக்கும். ஆனால், சனி நல்ல சிலந்தி, நம்மை சாப்பிட்டு விட மாட்டார். மாறாக மூன்றாம் இடத்திற்கு வரும் சமயத்தில் நன்மைகளை கொடுத்து தேற்றி விட்டுப் போவார். சனி நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்கும் அளவிற்கு ஏழரைச் சனி முடிந்து மூன்றாம் இடத்திற்கு வரும் சனி நன்மையை செய்வார்.
மேலும் படிக்க... இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்...
இதற்கு அடுத்த படியாக சனி எட்டாம் இடத்திற்கு வரும் போது பெரும் தீமையை செய்வார். ஏழரை ஆண்டு காலம் தரும் வேதனையை அந்த இரண்டரை காலங்களில் தந்து விடுவார். அதிலும் நம் உறவுகளில், நமக்கு பிடித்த வயோதிக நபர்களை கொஞ்சம் அதிக கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும் (சனி அஷ்டமத்தில் வரும் போது). அடுத்து சனி நான்கில் வரும் போது அர்த்தாஷ்டம சனி என்பார்கள் (அதாவது அஷ்டமத்தில் பாதி). சொல்லவே வேண்டாம்.
மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்
இதில் ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபாடு செய்வது. சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு வந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது என செய்து வந்தால் நல்லது. இதில் தாய், தந்தை இல்லாதவர்கள் மட்டும் காக்கைக்கு எள் சோறு வைக்கலாம் (வெங்காயம், பூண்டு அதில் இருக்க கூடாது).
அத்துடன் துர் வார்த்தைகள் (ஏழரை, சனியன் போன்ற இன்னும் பல வார்த்தைகள்) வாயில் வராமல் பார்த்துக் கொள்வது. முடிந்தால் சனிக் கிழமைகளில் எள், நல்லெண்ணெய், இரும்பு ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை தானம் செய்வது அல்லது முடிந்தால் யாரிடம் இருந்தும் இதனை பெறாமல் இருப்பது நல்லது. கருப்பு துணியை பிரம்மச்சாரிகளுக்கு தானம் அளிப்பது போன்ற இவை அனைத்துமே சனிப் ப்ரீத்தி ஆகும். இது தவிர ஆஞ்சநேய வழிபாடு செய்யலாம். ஸ்ரீ ருத்திரம் அடிக்கடி பாராயணம் செய்யலாம்.
மேலும் படிக்க... அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple