Home /News /spiritual /

செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்ய சரியான காலம், நேரம் எது?

செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்ய சரியான காலம், நேரம் எது?

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்ய வேண்டும். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

    பரிகாரம் செய்யகூடாத காலம்

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

    எளிய பரிகாரமும் வழிபாடும்

    செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.

    மேலும் செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும். செவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.

    மேலும் படிக்க... செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு!

    செவ்வாயின் சிறப்பு

    ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருக்கு நல்ல நிர்வாகத் திறனை தரக்கூடிய கிரகம் செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் உடலில் ரத்தத்தை குறிப்பவர். நெருப்பின் சுவரூபம். சிலர் முருகப் பெருமானின் ஸ்வரூபம் என்றும் இவரை சொல்கின்றனர். இவரது நிறம் நல்ல சிவப்பு. இன்று விஞ்ஞானிகள் ராக்கெட் அனுப்பி செவ்வாயின் நிறம் சிவப்பு என்று கண்டு பிடித்து உள்ளனர். எனினும், நமது சித்தர்கள் இதனை அக்காலத்திலேயே சொல்லி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடையாகுமா?

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dhosham | தோஷம், MARS, Temple

    அடுத்த செய்தி