கேள்வி : சத்குரு Awareness என்பதை consciousness என்பதாக உருவாக்க வேண்டுமா? இல்லை அது தானாக வர வேண்டுமா ?
சத்குரு விளக்கம் : உயிரோடு இருப்பதே விழிப்புணர்வு நிலை தான். விழிப்புணர்வு இருப்பதனால் தான் உயிரோடு உள்ளோம். உயிர் தான் விழிப்புணர்வு. எந்த அளவிற்கு உயிரோட்டம் ஒருத்தர் சிறிதளவு , இன்னொருத்தர் கொஞ்சம் அதிகம். இன்னொருத்தர் இன்னும் அதிக விழிப்புணர்வு. கொஞ்சம் வோல்டேஜ் அதிக படுத்திக்கிறாங்க அவ்ளோதான். எல்லாருக்கும் கொஞ்சம் வெளிச்சம் இருக்குது. ஆனா வோல்டேஜ் கம்மி.
என்ன காரணம்னா பணம் பத்தல, துணி பத்தல, அது பத்தல, இது பத்தலனு இப்டி ஒரே மாதிரியான கலாச்சாரத்துல இருந்து வந்துருக்கறதுனால கொஞ்சம் உயிர் செலவு செய்தால் பத்தாமல் போய்விடுமோ எனும் பயம் கொஞ்சம். ரொம்ப சிரிச்சுட்டா ஐயோ போச்சு அவ்ளோதான். அப்டினு சொல்லிக்கிறாங்க. இன்னைக்கு ரொம்ப சிரிச்சா நாளைக்கு அழுதுடுவோம்னு.
உயிர் தன்மை, ஆனந்தம் , அமைதி எல்லாம் செலவு பண்ணாதான். பிடிச்சு வச்சா ஒன்னும் இருக்காது. எந்த அளவிற்கு வெளியில போடுறீங்களோ அந்த அளவிற்குத் தான் நமக்கு இருக்குது. பிடிச்சு வச்சா முடிச்சா ஆய்டுவீங்க. ஏதோ ரேஷன்ல குடுக்குற சர்க்கரை மாதிரி. அது காலியா போனா காபி இனிக்காது அப்டினு நினைச்சுட்டாங்க. அன்பு, ஆனந்தம் உயிர் தன்மை என்பது அப்படி இல்லை. எந்த அளவிற்கு நீங்கள் அதனை செலவு செய்யிறீங்களோ அதே அளவிற்கு அதனை மிகைப்படுத்தும்.
கம்மியா இருந்தா கம்மியாய்டும். பொருட்கள் விரைவில் தீர்ந்து போய்டும் என்பதால உயிரும் தீர்ந்து போய்டுமோனு ஒரு எண்ணம் வந்திருச்சு . அது அப்படி இல்லை. இந்த உயிர் நன்றாக வளரணும்னா தீவிரமாக இருக்கணும். கம்மியா எல்லாம் பண்ணி வச்சா உயிர் நீண்ட நாள் இருக்கும் அப்படி இல்லை. இருக்குற அப்பவே முழுமையாக எரியனும் தானே?
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.