Home /News /spiritual /

திருப்பதி இலவச தரிசன டிக்கெட்டுகள் என்ன ஆனது தெரியுமா?

திருப்பதி இலவச தரிசன டிக்கெட்டுகள் என்ன ஆனது தெரியுமா?

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.  டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு கடந்த 27ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் கடந்த 27ஆம் தேதி காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

    ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதனை பக்தர்கள் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில், அடுத்த மாதத்திற்காக வெளியிடப்பட்ட 3.10 லட்சம் இலவச தரிசன டிக்கெட்கள் அடுத்த 16 நிமிடத்திலேயே அனைத்து  டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர். இதனை  திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க... திருப்பதி கோவில் குறித்து உங்களுக்குத் தெரியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உண்மைகள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati temple

    அடுத்த செய்தி