ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

பெருமாள்

பெருமாள்

பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11 ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம். இப்பொழுது வைகுண்ட ஏகாதசியன்று எவ்வாறு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி விரதம் இருப்பதினால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.
முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் பழங்கள் நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து விட்டு உண்ணலாம்.
முக்கியமாக பயித்தம் பருப்பால் செய்த கஞ்சி பெருமாளுக்கு மிகவும் விசேஷம். எனவே அதை செய்து இறைவனுக்குப் படைத்து விட்டு பருகலாம்.
இரவு முழுவதும் கண்விழித்து புராண நு}ல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.
துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.
பலன்கள்: வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று iறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை.
மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். சொர்க்க வாசல் வழியே செல்பவர்கள் பாவம் தீர்ந்து சொர்க்கம் சென்றடைவார்கள் என்பது ஐதீகம்.
சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும்.
வைகாசி - கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும்
ஆனி - சொர்க்கம் செல்லும் பாக்யம் கிடைக்கும்.
ஆடி - ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
ஆவணி - மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.
புரட்டாசி - நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
ஐப்பசி - சகல வளங்களும் உண்டாகும்.
கார்த்திகை - மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் .
தை - பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்க பெறும்
மாசி - சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கி நன்மை பெருகும்.
பங்குனி - தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும் மகிழ்ச்சி உண்டாகும்.
First published:

Tags: Vaikunda ekadasi