விளக்கு ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயின் பலன்கள் என்னென்ன?

விளக்கு

வீட்டில் நாம் தீபம் ஏற்றி இறைவனை பூஜை செய்து வழிபடும் போது எந்த எண்ணெய் பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்ன பலன் உண்டாகும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

  • Share this:
கோயில்களில் தீபத்துக்கு நெய் விடுவது மிகச் சிறப்பான பலன் தரும். முன் ஜென்ம கரும வினைகள் நீங்கும். எந்த தெய்வத்தின் சந்நிதியிலும் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றலாம். அதிலும், குறிப்பாக ஸ்ரீ நாராயணனுக்கு நல்லெண்ணெய் தீபமே உகந்தது. ஸ்ரீ மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது உகந்தது. விநாயகப் பெருமானுக்கு தேங்காய் எண்ணெய் உகந்தது, அதில் தீபம் ஏற்றினால் அவரது அருள் பரிபூரணமாய் கிடைக்கும்.

1. பொதுவாகவே எல்லாத் தெய்வங்களுக்கும் நெய் கொண்டு தீபம் ஏற்றினால் இல்லத்தில் பல்வேறு நலன்கள் வந்து சேரும்.

2. நல்லெண்ணையில் தீபம் ஏற்றினால் - அனைத்துப் பீடைகளும் அகலும். சனி தோஷம் விலகும். அது சிறந்த சனிப் ப்ரீத்தி.

மேலும் படிக்க... விளக்கு ஏற்றுவதில் கூட இத்தனை விஷயங்கள் இருக்கா?

3. விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் - புகழ், வாழ்க்கை வசதி, தாம்பத்திய உறவு மேம்படும். துயரம் நீங்கும்.

குறிப்பு : கடலை எண்ணெயில் மட்டும் தீபம் ஏற்றுதல் கூடாது. அது பீடையைத் தரும்.

மேலும் படிக்க... சூரியனும் தமிழ் மாதங்களும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vaijayanthi S
First published: