• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நவக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்ட சில ஆபூர்வ மச்சங்களும் அதன் பலன்களும்...

நவக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்ட சில ஆபூர்வ மச்சங்களும் அதன் பலன்களும்...

மச்சம்

மச்சம்

நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட வாரி இறைக்கிறது. இந்த உண்மையைக் கண்டு அறிந்து அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் மச்ச சாஸ்திரம் ஆகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டாலோ அல்லது ஒரு சிலருக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தாலோ “அவனுக்கு என்னப்பா அவன் மச்சக்காரன்” என்பார்கள் நண்பர்கள். அப்படிக் கூறுபவர்கள் கொஞ்சம் பொறாமையால் இதனைக் கூறினாலுமே அது ஒரு வகையில் உண்மை தான். ஆம் நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட வாரி இறைக்கிறது. இந்த உண்மையைக் கண்டு அறிந்து அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் மச்ச சாஸ்திரம் ஆகும்.

    மச்சம் என்றால் என்ன?

    நமது உடலில் தலையில் இருந்து கால் பாதங்கள் வரையில் சதைப் பாகத்தை மூடியிருக்கும் மேல் தோலில் அமைந்துள்ள சிறிய புள்ளிகள் தான் மச்சங்கள் எனப் படும். இது மஞ்சள், நீலம் , சிவப்பு, வெளுப்பு, கருப்பு போன்ற ஏதாவது ஒரு நிறத்திலோ அல்லது பல நிறத்திலோ இருக்கலாம். அது போல இதன் அளவுகள் கூட வேறு படலாம். உதாரணமாக கடுகைப் போலவோ, மிளகைப் போலவோ அல்லது அதற்கு மேலும் பெரிதாகவோ காணப்படலாம்.

    சூரியன்

    உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் மங்கலான மஞ்சள் நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சூரியனின் அருளைப் பெற்றவர்கள். இவர்கள் பொதுவாக தைரியம் மிக்கவர்களாகக் காணப்படுவார்கள். எந்தப் பொறுப்பையும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும். எனினும், சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கலாம். இன்னும் சிலருக்கு காதல் கசக்கலாம். நாற்பது வயதிற்கு மேல் நன்றாக இருப்பார்கள். சிலருக்கு பித்த சம்மந்தமான வியாதிகள் வரலாம். பலர் உயர்ப்பதவியில் அரசு அதிகாரிகளாக இருப்பார்கள் என்கிறது சாமுத்ரிகா லட்சணம் என்னும் நூல்.

    சந்திரன்

    உடலின் எந்தப் பாகத்திலாவது சற்று வெளுப்பான நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சந்திரனின் ஆதிகத்தை கொண்டு இருப்பார்கள். இவர்கள் எதற்கு எடுத்தாலும் அவசரப் படுவார்கள். மற்றவர்களது ஆலோசனைகளை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமது பிரச்சனைகளைக் கூட தானே தீர்த்துக் கொள்ள முயலுவார்கள். எனினும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்திருந்தாலும் முரட்டு சுபாவம் சற்று அதிகமாகத் தான் இருக்கும். இவர்களது செல்வ நிலை மாறி, மாறி இருக்கும். வாழ்வில் கூட அதிக ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பார்கள். செய் தொழில் லாபம் இருக்கும். அதிக உணர்ச்சி வசப் படக் கூடியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சங்கீதத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

    செவ்வாய்

    ஒருவருடைய உடலில் உருவத்தில் பெரியதாகவோ, சிறியதாகவோ சிவப்பு நிற மச்சம் இருந்தால், அவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆட்சியை பெற்று இருப்பார்கள். அதிகத் துணிவு மிக்கவர்களாக இருப்பார்கள். அதிகப் பிடிவாத குணம் இருக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்களில் பலர் போலீஸ், ராணுவம், தீயணைப்பு, மருத்துவம் போன்ற துறைகளில் இருக்கலாம். பல சாகசங்களை நிகழ்த்துவார்கள். ரத்தக் கொதிப்பு, ஜூரம் போன்ற நோய்களால் பிற்காலத்தில் பலர் அவதிப்படலாம்.

    சிவப்பு மச்சம்


    புதன்

    உடலின் பகுதியில் பெரிதாகக் காணப்படும் மச்சம் மாநிறத்தில் இருந்தால் அத்தகையவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிக அறிவாளியாக இருப்பார்கள். ஆராய்ச்சி மனப் பான்மை சிலருக்கு அதிகம் இருக்கும். வாக்கு சாதுர்யம் அதிகம் இருக்கும். பலர் உழைப்பால் முன்னேறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் அதிகமாக மகிழ்ச்சி இருக்காது. வாயுத் தொல்லை, நரம்புத் தளர்ச்சி நோய்கள் கூட சிலருக்கு பிற்காலத்தில் ஏற்படக் கூடும். ஒரு சிலர் ஜோதிடர்களாகவோ, ஆராய்ச்சியாளர்களாகவோ, விஞ்ஞானிகள் ஆகவோ, எழுத்தாளர் களாகவோ, கணித வல்லுனர்கள் ஆகவோ இருக்கலாம். சிலர் வேத வித்தகர்களாக இருப்பார்கள்.

    மச்சம்


    குரு

    உடலில் ஏதாவது ஒரு இடத்தில் நீல நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உடல் பிற்காலத்தில் பருத்துக் காணப்படும். வட்ட வடிவமான முகம் கூட இருக்கலாம். ஆன்மீக சிந்தனை அதிகம் இருக்கும். சிறிது “தான்” என்ற அகந்தை இருக்கத் தான் செய்யும். நல்ல பெண் மனைவியாக அமைவாள். சொத்துக்கள் நிறைய வந்து சேரும். சட்ட வல்லுனர்களாகவும், இன்னும் சிலர் ஆசிரியர்களாகவும் இருப்பார்கள். எப்போதுமே யாருக்காவது உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் வியாபாரிகளாக இருப்பார்கள். பிற்காலத்தில் நரம்புத் தளர்ச்சி, அஜீரணக் கோளாறு கூட ஏற்படலாம். இன்னும் சிலருக்கு சரும வியாதிகளின் தொல்லை அதிகம் இருக்கலாம்.

    மேலும் படிக்க... மகாளய பட்சம் 2021 | மகாளய பட்ச தினம், திதி, நட்சத்திரம்

    இஷ்டி காலம் என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்தால் சிறப்பு...

    சுக்கிரன்

    உடலில் ஏதாவது ஒரு இடத்தில் உருவத்தில் பெரியதாக பழுப்பும், வெளுப்பும் கலந்த நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்று இருப்பார்கள் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்த்திரம். இது மிகவும் அபூர்வமான அமைப்பாகும். இவர்கள் பொதுவாக மாநிறத்துடன் இருப்பார்கள். காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இனிமையாகப் பேசும் தன்மை உடையவர்கள். தலைவர்கள், உலகம் போற்றும் செல்வந்தர்களுக்கு மட்டுமே இது போன்ற மச்சம் காணப்படும். இவர்கள் பெண்களைக் கவரும் குணம் கொண்டவர்கள். அழகும், செல்வமும் ஒரு சேரப் பெற்று இருக்கும் என்பதால் பெண்கள் இவர்களை சுற்றிச் சுற்றி வருவார்கள். எனினும், சிலருக்கு தண்ணீர், நெருப்பு இவைகள் மூலமாக கண்டங்கள் வரும். தலைவலி, நெஞ்சு வலி போன்றவை கூட அடிக்கடி வரலாம்.

    மேலும் படிக்க... புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

    சனி

    உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் உருவத்தில் பெரியதாக கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தைப் பெற்று இருப்பார்கள். பெரும்பாலும் இவ்வகை மச்சம் தான் பலருக்கு அதிகம் காணப்படுகிறது. அதிக உழைப்பாளிகளாக இருப்பார்கள். எதையும், எவரையும் எளிதில் மறக்க மாட்டார்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள். தனிமையை விரும்புவார்கள். வாழ்க்கையில் பிற்பகுதியில் தான் செல்வ நடமாட்டமே இருக்கும். ஜீரணக் கோளாறுகள், சரும வியாதிகள், ரத்த சம்மந்தமான நோய்கள் கூட சிலருக்கு வரலாம். சிலருக்கு சுவாசம் சம்மந்தமான கோளாறுகள் கூட வரலாம்.

    மேலும் படிக்க... ஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லையாம்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: