Horoscope : மேஷம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 28 முதல் ஏப்ரல் 3 வரை

Horoscope : மேஷம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 28 முதல் ஏப்ரல் 3  வரை

மேஷம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 27, 2021 - April 03, 2021

  • Share this:
    மேஷம்: எதிலும் கவனத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும்.எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

    தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு, வீண் அலைச்சல் குறையும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம்.

    பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

    பரிகாரம்:  தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
    Published by:Vijay R
    First published: