மேஷம்: என்றும் சுறுசுறுப்புடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் பெரும் முதலீடுகளைத் தவிர்க்கவேண்டும். வீடு, மனை விருத்தி செய்யும் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும். கடன்பட நேரிடும். அந்த கடனே பெரும் சிரமத்தைக் கொடுக்கும் எனவே நிதிநிலைகளில் அதிக கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.
குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும்.
பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.
பரிகாரம்: நவகிரகத்தில் சந்திரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.